News August 20, 2024

ஃப்ரஷர்ஸ்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு!

image

ஃப்ரஷர்ஸ்களுக்கான ‘பவர்’ என்ற சிறப்பு வேலைவாய்ப்புத் திட்டத்தை இன்ஃபோசிஸ் நிறுவனம் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. திறன் தேர்வு & நேர்காணலுக்குப் பின் தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு ஆண்டுத் தொகுப்பாக ₹6.5 லட்சம் – ₹9 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிகிறது. கோடிங், மென்பொருள் டெஸ்டிங், புரோகிராமிங்கில் திறமை உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இன்ஃபோசிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Similar News

News March 24, 2026

BREAKING: தங்கம் விலை பெரிய அளவில் குறைந்தது

image

ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹2,720 குறைந்து ₹1,04,000-க்கும், கிராமுக்கு ₹340 குறைந்து ₹13,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

News March 24, 2026

போர் இன்னும் நிற்கவில்லை.. US பேச்சை மீறும் இஸ்ரேல்

image

ஈரான் மீதான தாக்குதலை டிரம்ப் நிறுத்தினாலும், தாங்கள் நிறுத்தப் போவதில்லை என்று இஸ்ரேல் PM நெதன்யாகு தெளிவுபடுத்தியுள்ளார். தங்களின் போர்க்கள வெற்றிகளால் ஒப்பந்தத்திற்கு ஈரானை ஒப்புக்கொள்ள வைக்கமுடியும் என டிரம்ப் நம்புவதாக கூறிய அவர், ஆனாலும் ஈரான் & லெபனான் மீதான தாக்குதல்கள் தொடரும் என்றார். மேலும், எந்த சூழ்நிலையிலும் இஸ்ரேலின் நலன்களை பாதுகாப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

News March 24, 2026

முதல்வருக்கு எதிராக களமிறங்கும் EX முதல்வர்!

image

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியை எதிர்த்து EX முதல்வரும், காங்., MP-யுமான வைத்திலிங்கம் நேரடியாக களமிறங்குவது அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது. ரங்கசாமி, நாராயணசாமி, வைத்திலிங்கம் போன்ற முக்கிய தலைவர்கள், சம பலம் கொண்ட தலைவர்களுடன் போட்டிப் போடுவதை தவிர்த்து வந்தனர். ஏனென்றால் யாரேனும் ஒருவரது தோல்வி பேசுபொருளாகும். ஆனால், இம்முறை தட்டாஞ்சாவடி தொகுதியில் இருவரும் நேரடியாக மல்லுகட்டுகின்றனர்.

error: Content is protected !!