News April 8, 2024
‘தில்லு முல்லு’ பட பாணியில் மாட்டிக்கொண்ட பெண்

வீட்டில் ‘அவசரம்’ எனக் கூறி அலுவலகத்தில் அனுமதி வாங்கி விரைவாக கிளம்பிய பெண், ஐபிஎல் போட்டியை பார்க்கச் சென்று மேனேஜரிடம் மாட்டிக்கொண்டுள்ளார். RCB அணியின் வெறித்தனமான ரசிகை கிரிக்கெட் பார்ப்பதற்காக இவ்வாறு செய்துள்ளார். ஆனால், மைதானத்தில் அவர் இருந்ததை அவரது மேனேஜர் டிவியில் பார்த்துள்ளார். அந்தப் புகைப்படத்தை மேனேஜர் அவருக்கு பகிரவே, அதை அந்தப் பெண் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
Similar News
News April 6, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஏப்ரல் 6, பங்குனி 23 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:30 AM – 7:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: சதுர்த்தி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்
News April 6, 2026
ஒரே நாளில் 51 லட்சம் சிலிண்டர்கள் விற்பனை!

மேற்காசிய போர் சூழலுக்கு நடுவிலும் மார்ச் 23-ம் தேதி முதல் 6.6 லட்சம் 5 கிலோ சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. LPG சிலிண்டர்களுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை என்றும், ஏப்.4-ம் தேதி ஒரே நாளில் மட்டும் 51 லட்சம் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது. சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 50,000-க்கும் மேற்பட்ட சிலிண்டர்களையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
News April 6, 2026
பிரம்மோஸ் ஏவுகணை நாயகன் காலமானார்!

அதிவேக ஏவுகணையான ஸிர்கான் மற்றும் இந்திய-ரஷ்ய பிரம்மோஸ் என்ஜி ஏவுகணையின் வடிவமைப்பாளரான அலெக்சாண்டர் லியோனோவ் (74) உயிரிழந்தார். அவரது மரணத்திற்கான காரணத்தை ரஷ்ய அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. டெல்லியை தளமாக கொண்ட பிரம்மோஸ் ஏரோஸ்பேஸின் ரஷ்ய கூட்டு நிறுவனப் பங்காளியான NPOMASH நிறுவனத்தின் CEO ஆகவும் அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


