News June 26, 2024
சிவப்பு, ரோஸ் நிறத்தில் பாய்ந்த ராட்சத மின்னல்

பிரபஞ்சத்தின் ரகசியங்களை ஆராய்ந்து வரும், NASA விண்வெளி ஆராய்ச்சி மையம் அவ்வப்போது, அரிய நிகழ்வுகளை கண்டுபிடித்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், சீனா-பூடானை ஒட்டிய இமயமலைப் பகுதியில் சிவப்பு, ரோஸ் நிறத்தில், மின்னலாகப் பாய்ந்த ராட்சத ஒளித்திரள்களை நாசா படம்பிடித்துள்ளது. இதுகுறித்து கூறிய விஞ்ஞானிகள், சூரிய கதிர்வீச்சு, காஸ்மிக் கதிர்வீச்சுகளால் இந்த நிகழ்வு நடத்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 6, 2025
IND vs AUS: அரை சதத்தை தவறவிட்டார் கில்

ஆஸி.,க்கு எதிரான 4-வது டி20-ல், இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் அரை சதத்தை தவறவிட்டுள்ளார். 39 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து 46 ரன்கள் எடுத்த நிலையில், நேதன் எல்லிஸ் வீசிய ஸ்விங்கரில் போல்ட் ஆனார். 14.1 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 121 ரன்களை எடுத்துள்ளது. சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா களத்தில் உள்ளனர்.
News November 6, 2025
இந்த நாடுகளுக்கு விசா தேவையில்லை.. பறப்போமா?

நினைத்த நேரத்தில் பையை எடுத்துக்கொண்டு பறக்க வேண்டுமா? பாஸ்போர்ட் இருந்தால் போதும், விசா தேவையில்லை. இது உங்களுக்கு தெரியுமா? உலகின் சில நாடுகளுக்கு, இந்தியர்கள் விசா இல்லாமல் எளிதாக பயணிக்கலாம். அவை எந்தெந்த நாடுகள் என்று மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், நீங்கள் எந்த நாட்டுக்கு பறக்க போறீங்க. கமெண்ட்ல சொல்லுங்க.
News November 6, 2025
BREAKING: விடுமுறை… நாளை முதல் முக்கிய அறிவிப்பு

வார விடுமுறையில் மக்கள் நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல சுமார் 1,000 சிறப்பு பஸ்களை TNSTC அறிவித்துள்ளது. அதன்படி, நாளை(நவ.7) முதல் 9-ம் தேதி வரை சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட இடங்களிலும், கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் இருந்தும் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. www.tnstc.in இணையதளம், TNSTC செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்தும் பயணிக்கலாம். SHARE IT.


