News October 15, 2024
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு உள்வாங்கியது

சென்னையில் கனமழை பெய்துவரும் நிலையில், அமைந்தகரை அருகே அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்வாங்கியுள்ளது. நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் தரைப்பகுதி 150 மீ தூரத்திற்கு, 20 அடி ஆழத்திற்கு உள்வாங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள் உடனடியாக வீட்டைவிட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். குடியிருப்பின் சுவரிலும் விரிசல் விழுந்துள்ளதால் அச்சமடைந்துள்ளனர்.
Similar News
News August 16, 2025
அமைச்சர் ஐ.பெரியசாமி கைதாக வாய்ப்பு?

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் காலையில் இருந்து ED சோதனை செய்து வருகிறது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக கிடைத்த பல்வேறு ஆவணங்கள் அடிப்படையில் அவரிடம் ED அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணையை தொடங்க திட்டமிட்டுள்ளனர். ஏற்கெனவே இதுபோன்ற வழக்குகளில், அமைச்சர்களாக இருந்த செந்தில் பாலாஜி & பொன்முடியை ED கைது செய்தது. தற்போது ஐபி மீதும் கைது நடவடிக்கை பாயும் என்று தகவல் கசிந்துள்ளது.
News August 16, 2025
பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர்: CM ஸ்டாலின்

தமிழகத்தில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதாக கவர்னர் R.N.ரவி குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் குற்றங்கள் மற்றும் குற்றச்செயல்கள் குறைந்து வருவதுடன், பெண்களும் பாதுகாப்பாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News August 16, 2025
ராஜஸ்தான் பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாயம்

மும்மொழிக் கொள்கை மூலம் ஹிந்தியை மத்திய அரசு திணிப்பதாகவும், சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி ஒதுக்குவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில், பாஜக ஆளும் ராஜஸ்தானில் Pre-KG, LKG, UKG வகுப்புகளில் சமஸ்கிருதம் கட்டாயம் என்ற நடைமுறை விரைவில் அமலுக்கு வரவுள்ளதாம். இதற்கு NCERT மற்றும் மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் இது நடைமுறைக்கு வரும். உங்கள் கருத்து என்ன?