News August 8, 2024

அர்ஜூன் சம்பத்துக்கு ₹4,000 அபராதம்

image

நடிகர் விஜய் சேதுபதி விவகாரத்தில் அர்ஜூன் சம்பத்துக்கு ₹4,000 அபராதம் விதித்து, கோவை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேவர் குறித்து விஜய் சேதுபதி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரை தாக்கினால், ரொக்கப்பரிசு ₹1,001 வழங்கப்படும் என அர்ஜூன் சம்பத் அறிவித்தார். இதுதொடர்பாக 2021இல் பதிவு செய்யப்பட்ட வழக்கில், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவருக்கு ₹4,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 11, 2025

டி20-ல் ஆதிக்கத்தை தொடருமா இந்தியா?

image

IND vs SA இடையிலான 2-வது டி20 இன்று நடைபெற உள்ளது. முதல் போட்டியில் இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பதிவு செய்தது. அதை இன்றைய போட்டியிலும் தொடருமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல், படுமோசமான தோல்வியை சந்தித்த SA, பழிவாங்க முயற்சிக்கும் என்பதால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. 5 போட்டிகளை கொண்ட இந்த தொடரில், 1-0 என இந்தியா முன்னிலையில் உள்ளது.

News December 11, 2025

CBSE 10-ம் வகுப்பு வினாத்தாளில் மாற்றம்

image

வரும் கல்வியாண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான வினாத்தாள்களில் CBSE மாற்றம் செய்ய உள்ளது. அதன்படி, அறிவியல் வினாத்தாள் A (உயிரியல்), B (வேதியியல்), C (இயற்பியல்) மற்றும் சமூக அறிவியல் வினாத்தாள் A (வரலாறு), B (புவியியல்), C (அரசியல் அறிவியல்), D (பொருளாதாரம்) என பிரிக்கப்படும். இந்த கட்டமைப்பில் விடைகளை எழுத தவறினால் மதிப்பீடு செய்யப்படாது.

News December 11, 2025

‘வா வாத்தியார்’ படத்துக்கு தடை நீட்டிப்பு

image

நாளை வெளியாக இருந்த ‘வா வாத்தியார்’ படத்திற்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் பெற்ற ₹21.78 கோடியை திருப்பி தராததால், படத்தை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனால், இப்படத்தை வெளியிட சமீபத்தில் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது கடன் தொகையை செலுத்தும் வரை படத்தை ரிலீஸ் செய்ய நீதிபதிகள் தடைவிதித்துள்ளனர்.

error: Content is protected !!