News November 20, 2024

மெட்டா நிறுவனத்திற்கு ₹213.14 கோடி அபராதம்

image

இந்திய போட்டி ஆணையம் (CCI), மெட்டா நிறுவனத்திற்கு ₹213.14 கோடி அபராதம் விதித்துள்ளது. வாட்ஸ்அப்பில் தனியுரிமை கொள்கைகள் தவறாக பயன்படுத்தப்பட்டதையும், விளம்பர நோக்கங்களுக்காக பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் மெட்டாவின் மற்ற நிறுவனங்களுக்கு பகிரப்பட்டதையும் CCI கண்டுபிடித்ததால், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆனால் CCI-யின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது.

Similar News

News March 9, 2026

ஆன்லைனில் TVK கிட்..

image

தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கட்சிகளின் கொடி, துண்டு போன்றவற்றின் வியாபாரமும் படு ஜோராக நடந்து வருகிறது. இந்நிலையில், அமேசானில் ‘TVK COMBO கிட்’ விற்பனைக்கு வந்துள்ளது. இதில், தவெக கீ செயின், விசில், பேட்ஜ், விஜய் ஸ்டிக்கர், கட்சிக்கொடி, கையில் மாட்டும் பேண்ட், கட்சித்துண்டு போன்றவை இடம்பெற்றுள்ளன. விற்பனைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே இது விற்றுத் தீர்ந்துள்ளதாம்.

News March 9, 2026

மகளிர் வங்கி கணக்கில் ₹5,000.. சற்றுமுன் டெபாசிட்

image

தமிழகத்தை தொடர்ந்து, புதுச்சேரியிலும் மகளிர் வங்கி கணக்கில் இன்று ₹5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கான உரிமை தொகை ₹5,000 மொத்தமாக வழங்கப்படும் என CM ரங்கசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன்படி, 63,000 குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, ₹31.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 9, 2026

கில்லியில் விஜய்-த்ரிஷாவுக்கு பதில் இவர்களா?

image

விஜய் – த்ரிஷா முதன்முதலாக ஒன்றாக நடித்த படம் ’கில்லி’. இதில் இவர்களுக்கு பதில் வேறு இருவர் நடிக்கவிருந்ததாக கூறப்படுகிறது. இப்படத்துக்கான முதல் சாய்ஸாக விக்ரமும், ஜோதிகாவும்தான் இருந்தனராம். ஆனால், அந்த சமயத்தில் இருவருமே பிசியாக இருந்திருக்கின்றனர். இதனால் இருவராலும் கால்ஷீட் கொடுக்க முடியாமல் போனதால் இவர்களை விடுத்து விஜய்யையும் த்ரிஷாவையும் நடிக்க வைக்க டைரக்டர் தரணி முடிவெடுத்திருக்கிறார்.

error: Content is protected !!