News October 7, 2025
பிக்பாஸ் வீட்டில் சண்டை வெடித்தது

பிக்பாஸ் தொடங்கிவிட்டது, இனி சண்டைக்கு பஞ்சம் இருக்காது. வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரின் செயல்பாடுகள் அப்படித்தான் இருக்கின்றன. முதல் நாளில் கெமி உடன் சண்டையிட்ட அவர், தற்போது ரம்யா ஜோவுடன் மோதலில் ஈடுபட்டுள்ளார். அனைத்து விஷயங்களிலும் திவாகர் மூக்கை நுழைப்பதாக ரம்யா கூற, ‘ஏய் செல்றத கேளுமா’ என அவர் சத்தம்போடுகிறார். ‘கத்துற வேலையெல்லாம் வச்சிக்கக் கூடாது’ என ரம்யாவும் பதிலடி கொடுத்துள்ளார்.
Similar News
News October 8, 2025
மோடி முதல்வரான கதை (1/2)

PM மோடி, 25 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்(அக்.7) குஜராத்தின் CM பதவியை ஏற்றார். சங்கர்சிங் வகேலா, கேசுபாய் படேல் போன்ற தலைவர்கள் கோலோச்சிய குஜராத்தில் மோடி CM பதவியை பிடித்தது எப்படி? 67 ஆக இருந்த பாஜக MLA-க்கள் பலம், 1995-ல் 121 ஆக உயர, குஜராத் அமைப்பு செயலாளரான மோடி ஆதரித்த, கேசுபாய் படேல் முதல்வரானார். சங்கர்சிங் வகேலாவின் கலகத்தை அடுத்து, 2 தரப்புக்கும் பொதுவான சுரேஷ் மேத்தா CM ஆனார்.
News October 8, 2025
மோடி முதல்வரான கதை (2/2)

1998-ல் சங்கர்சிங் வகேலா கட்சியில் இருந்து விலக, கேசுபாயை CM பதவி மீண்டும் தேடிவந்தது. 98-ல் PM வாஜ்பாய், மோடியை தேசிய அமைப்பு பொது செயலாளராக்கினார். 2001 உள்ளாட்சி தேர்தல் தோல்வி, நிலநடுக்கத்தை எதிர்கொள்வதில் சுணக்கம் கேசுபாய்க்கு எதிராக திரும்பின. தேர்தலுக்கு 1 வருடம் இருக்கும் போது, 2001 அக்.7-ல் குஜராத்தின் CM ஆன மோடி, 2014-ல் PM பொறுப்பை ஏற்கும் வரை, 11 ஆண்டுகள் பதவியில் தொடர்ந்தார்.
News October 8, 2025
நாக்கை நாட்டியமாட வைக்கும் உங்கள் ஊர் உணவு எது?

‘Foodie’ என்ற சொல்லின் உருவாக்கத்திற்கு முன்பே உணவை ரசித்து ருசித்து உண்பதில் நமக்கு நிகர் யாரும் கிடையாது. இதில் இனிப்பு, காரம் என்ற எந்த விதிவிலக்கும் கிடையாது. அந்த வகையில் சில சிறப்பான, தனித்துவமிக்க உணவுகள், குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே கிடைக்கும். உதாரணமாக நெல்லை சொதி குழம்பு, கோவை அரிசி பருப்பு சாதம், சென்னை பிரிஞ்சி. உங்கள் ஊரின் தனித்துவமிக்க உணவு எது என்று கமெண்ட்டில் சொல்லுங்கள்.