News March 29, 2025

யாரும் நிகழ்த்தாத சாதனை… SIR ஜடேஜாவின் மாஸ்!

image

இதுவரை, IPL தொடரில் 3000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை எடுத்த ஒரே வீரர் என்ற வரலாற்றை ஜடேஜா படைத்துள்ளார். அவர் இதுவரை, 242 போட்டிகளில் 3,001 ரன்களும், 160 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஸ்பின் ஆல்ரவுண்டரான ஜடேஜா சென்னையின் அணியின் முக்கிய தூணாகவே இருக்கிறார்.

Similar News

News January 24, 2026

இலை துளிர்த்து தாமரை மலரும்: அண்ணாமலை

image

நேற்று நடந்த NDA கூட்டணி பொதுக்கூட்டத்தில், மோடியை தொடர்ந்து EPS, TTV, அன்புமணி என பலரும் திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்தனர். அந்த வரிசையில் அண்ணாமலை, சூரியன் மறையும்போது மழை வரும்; அப்போது தமிழ்நாட்டில் இலை துளிர்த்து தாமரை மலரும் எனவும், 2026 தேர்தலில் EPS வெற்றி பெற்று முதலமைச்சராவார் என்று பேசினார். மேலும், திமுக ஆட்சியை தூக்கி ஏறிய வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் இருக்கிறோம் என்றார்.

News January 24, 2026

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று கடலோரம் மற்றும் ஒருசில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்​னை, செங்​கல்​பட்​டு, காஞ்​சி, திரு​வள்​ளூர், தி.​மலை, விழுப்​புரம், கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது. மேலும், குமரிக்​கடல் பகு​தி​களில் மணிக்கு 40-60 கி.மீ. வேகத்​தில் சூறாவளிக்​காற்று வீசக்கூடும் என மீனவர்களையும் எச்சரித்துள்ளது.

News January 24, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶ஜனவரி 24, தை 10 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 PM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: சஷ்டி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.

error: Content is protected !!