News April 29, 2025
சந்தேகத்தால் சிதைந்த குடும்பம்

வீட்டில் அண்ணன் உள்ளாடையுடன் சுற்றித் திரிந்ததால் சந்தேகத்தில் தம்பி தனது மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். உ.பியின் கோரக்பூரில் தம்பிக்கு அண்மையில் திருமணம் நடந்துள்ளது. புதுப்பெண் சரோஜின் சமையலை மாமியார், மைத்துனர் என அனைவரும் பாராட்டியுள்ளனர். இதனை விரும்பாத கணவர் சதீஷ், சரோஜை அழைத்து கண்டித்துள்ளார். பின்னர், சந்தேகத்தில் மனைவியை கொலை செய்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Similar News
News January 2, 2026
BREAKING: தங்கம் விலை மிகப்பெரிய மாற்றம்

தங்கம் விலை இன்று (ஜன.2) 22 கேரட் கிராமுக்கு ₹140 உயர்ந்து ₹12,580-க்கும், சவரன் ₹1,120 உயர்ந்து ₹1,00,640-க்கும் விற்பனையாகிறது. புத்தாண்டின் முதல் நாள் தங்கம் விலை சரிவுடன் தொடங்கிய நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளதால் நகைப் பிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
News January 2, 2026
ரகசியங்களை பகிர்ந்த இந்தியா – பாகிஸ்தான்

இந்தியா மற்றும் பாகிஸ்தான், ஒவ்வொரு ஆண்டும் ஜன.1-ம் தேதி தங்களிடம் உள்ள அணுசக்தி நிலையங்கள் குறித்த தகவல்களை பரிமாறிக்கொள்ள வேண்டும் என 1988-ல் ஒப்பந்தம் கையெழுத்தானது. மோதல் ஏற்படும்போது அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவதை தவிர்க்கும் விதமாக இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், ஒப்பந்தத்தின் படி நேற்று இருநாடுகளும், அணுசக்தி நிலையங்கள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டன.
News January 2, 2026
அதிமுக விருப்ப மனு மூலம் ₹15.26 கோடி

2026 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட 10,175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. விருப்ப மனு ஒன்றிற்கு ₹15,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதன்படி பார்த்தால், விருப்ப மனுக்கள் மூலம் அதிமுகவுக்கு ₹15.26 கோடி (15 கோடியே 26 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்) கிடைத்துள்ளது. குறிப்பாக, EPS போட்டியிட வேண்டும் என 2,187 மனுக்கள் பெறப்பட்டதன் மூலம் 3 கோடியே 28 லட்சத்து 5 ஆயிரம் கிடைத்துள்ளது.


