News August 10, 2024
மமிதா பெயரில் போலி கணக்கு

நடிகை மமிதா பைஜு பெயரில் எக்ஸ் தளத்தில் போலி கணக்குகளை உருவாக்கி அவதூறு செய்து வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தனக்கு எக்ஸ் தளத்தில் கணக்கு இல்லை எனவும், அவதூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ‘பிரேமலு’ என்ற மலையாள படத்தின் மூலம் பிரபலமான மமிதா, தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் ராம்குமார் இயக்கி வரும் புதிய படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 6, 2025
திமுக ஆட்சியில் எனக்கு நெருக்கடி: செல்வப்பெருந்தகை

விஜய்க்கு மட்டுமல்ல தனக்கும் கூட ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி அளிக்கப்படுவதில்லை என செல்வப்பெருந்தகை வருத்தம் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி, இந்தியா கூட்டணி ஆட்சி, நம்முடைய ஆட்சி என சொல்கிறோம், ஆனால் அந்த ஆட்சி என்னை எத்தனை முறை கைது செய்திருக்கிறது என கேட்டுப்பாருங்கள் என பேசியுள்ளார். மேலும், இதுவரை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டபோது 20 முறை தான் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 6, 2025
மழை வெளுத்து வாங்கும்

கனமழையால் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், நெல்லை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. எனவே பள்ளி, கல்லூரி, ஆபீஸுக்கு செல்பவர்கள் குடைகள், ரெயின் கோட்டை எடுத்து செல்ல மறக்காதீங்க மக்களே!
News November 6, 2025
கனமழை: முதல் மாவட்டமாக விடுமுறை அறிவிப்பு

கனமழை எதிரொலியால் முதல் மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூரில் காலை 6 மணி முதல் மழை கொட்டித் தீர்க்கிறது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் விடுக்கப்பட்டதால், மற்ற மாவட்டங்களுக்கும் விடுமுறை அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.


