News January 22, 2025

டிப்ளமோ போதும்..மாசம் ₹60 ஆயிரம் வரை சம்பளம்!

image

திருச்சி, ராணிப்பேட்டையில் அமைந்துள்ள பெல் (BHEL) நிறுவனத்தில் 400 காலியிடங்கள் உள்ளன. டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது 27 – 29 மிகாமல் இருக்க வேண்டும். கணினி வழித் தேர்வு உண்டு. தகுதிக்கேற்ப வருடம் ₹7.5 லட்சத்தில் இருந்து ₹12 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. வரும் பிப். 1 முதல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். <>முழு விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்<<>>.

Similar News

News December 11, 2025

சென்னையில் 36 இண்டிகோ விமானங்கள் ரத்து

image

DGCA-வின் <<18476353>>புதிய விதிமுறைகளை<<>> நடைமுறைப்படுத்த முடியாமல் திணறி வரும் இண்டிகோ, இன்றும் பல விமானங்களை ரத்து செய்துள்ளது. குறிப்பாக சென்னையில் இருந்து புறப்படும்(24), மற்றும் சென்னைக்கு வரும்(12) 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்று 70 விமானங்கள் ரத்தான நிலையில், அது தற்போது பாதியாக குறைந்துள்ளது கவனிக்கதக்கது. விரைவில் நிலைமை முற்றிலும் சீராகும் என இண்டிகோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 11, 2025

திமுகவை வைத்து வளர நினைக்கும் விஜய்: DMK

image

சமீபத்தில் நடந்த புதுச்சேரி கூட்டம் உட்பட, தொடர்ந்து விஜய் திமுகவை தாக்கி பேசிவருவதற்கு செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். எல்லா கட்சிகளுமே திமுகவையே போட்டியாக நினைப்பதாகவும், அதன் மூலம்தான் தாங்கள் வளர முடியும் என்றும் அவர்கள் குறிக்கோளுடன் இருக்கிறார்கள் எனவும் பேசியுள்ளார். ஆனால் திமுகவை வீழ்த்த வேண்டும் என்கின்ற அவர்களது கனவு ஒருபோதும் பலிக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

News December 11, 2025

இன்று விடுமுறை எடுத்தால்… அரசு முக்கிய உத்தரவு

image

அரசு ஊழியர்கள் இன்று விடுமுறை எடுத்து, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால், சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் (டிட்டோஜாக் அமைப்பு) இன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். இந்நிலையில், அரசு ஊழியர்கள் மருத்துவ விடுப்பை தவிர, வேற எந்தவித விடுப்பும் எடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!