News January 22, 2025
டிப்ளமோ போதும்..மாசம் ₹60 ஆயிரம் வரை சம்பளம்!

திருச்சி, ராணிப்பேட்டையில் அமைந்துள்ள பெல் (BHEL) நிறுவனத்தில் 400 காலியிடங்கள் உள்ளன. டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது 27 – 29 மிகாமல் இருக்க வேண்டும். கணினி வழித் தேர்வு உண்டு. தகுதிக்கேற்ப வருடம் ₹7.5 லட்சத்தில் இருந்து ₹12 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. வரும் பிப். 1 முதல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். <
Similar News
News November 27, 2025
WPL: ₹3.2 கோடிக்கு தீப்தி சர்மா ஏலம்

WPL ஏலத்தில் இந்திய ஆல்ரவுண்டர்
தீப்தி சர்மாவை ₹3.2 கோடிக்கு UP வாரியர்ஸ் வாங்கியுள்ளது. அவரை வாங்க டெல்லி கேபிடல்ஸ் ஆர்வம் காட்டிய நிலையில், இறுதியாக RTM வாய்ப்பை பயன்படுத்தி தீப்தி சர்மாவை UP வாரியர்ஸ் தட்டித் தூக்கியது. ஆஸ்திரேலிய வீராங்கனை மெக் லேனிங்கையும் ₹1.9 கோடிக்கு UP வாரியர்ஸ் ஏலம் எடுத்தது. இந்திய பந்துவீச்சாளர் ரேணுகா சிங் ₹60 லட்சத்துக்கு குஜராத் ஜெயண்ட்ஸில் இணைந்துள்ளார்.
News November 27, 2025
ஆதார் குடியுரிமைக்கான சான்று கிடையாது: SC

ஆதாரை குடியுரிமைக்கான சான்றாக கருத முடியாது என SIR-க்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையில் SC கருத்து தெரிவித்துள்ளது. ஆதார் என்பது குடிமக்கள் சலுகைகளை பெறுவதற்கான ஆவணம் மட்டுமே. ஒருவருக்கு ரேஷன் வாங்குவதற்காக ஆதார் வழங்கினால், வாக்குரிமை கொடுக்கப்பட வேண்டுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், வரும் டிச.1-க்குள் TN அரசு தாக்கல் செய்த மனுவிற்கு ECI விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
News November 27, 2025
2026-ல் சீமான் போட்டியிடும் தொகுதி இதுவா?

2026 சட்டமன்ற தேர்தலில் சீமான், காரைக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காரைக்குடியில் நாதக சார்பில் இன்று நடைபெறும் மாவீரர் நாள் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, 2016-ல் கடலூரிலும், 2021-ல் திருவொற்றியூரிலும் போட்டியிட்டு சீமான் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.


