News March 22, 2025
வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நாள்: ஸ்டாலின்

வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நாள் இது என CM மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டுக்குழு கூட்டம் தொடங்கவுள்ள நிலையில் X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், #Fair Delimitationஐ உறுதி செய்வதன் மூலம் அதன் கூட்டாட்சிக் கட்டமைப்பை பாதுகாக்க ஒன்றிணைந்த நாள். அனைத்து மாநில CMகளையும், அரசியல் தலைவர்களையும் இந்த கூட்டத்திற்கு வரவேற்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 22, 2025
7 நாட்கள் மணப்பெண் நிர்வாணமாகும் பாரம்பரியம்

இமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள பினி கிராமத்தில் திருமணமான புதுமண தம்பதிகள் தொடர்பாக வினோத வழக்கம் ஒன்று நீண்ட நாட்களாக பின்பற்றப்படுகிறது. திருமணமான பிறகு புதுமணப்பெண் 7 நாட்களுக்கு ஆடையின்றி நிர்வாணமாக இருக்க வேண்டும், அதேபோல், புது மாப்பிள்ளை மது அருந்தக் கூடாதென்பதே அந்த வழக்கம் ஆகும். இந்த வழக்கத்தை கடைபிடித்தால் 2 பேருக்கும் கடவுள் ஆசிர்வாதம் கிட்டும் என நம்பப்படுகிறது.
News March 22, 2025
மநீம புதிய மாநில, மண்டல நிர்வாகிகள் நியமனம்

மநீம-க்கு புதிய மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகளை கமல் நியமித்துள்ளார். ஆதிதிராவிடர் அணி மாநில செயலாளராக சிவா, மகளிர் அணி மாநிலச் செயலாளர்களாக முகாம்பிகா ரத்தினம், சினேகா மோகன், பத்மாவதி, கலையரசி நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டச் செயலாளர்களாக தனபாலன் (அம்பத்தூர்), பாலமுருகன் (வேளச்சேரி), பாஸ்கர் (கும்மிடிபூண்டி), சீனுவாசன் (எழும்பூர்), அப்துல் முசாபர் (தி.கேணி) நியமிக்கப்பட்டுள்ளனர்.
News March 22, 2025
ராக்கெட் வேகத்தில் இந்திய பொருளாதார வளர்ச்சி

பணவீக்கம், உக்ரைன் போர் உள்ளிட்ட காரணிகளால் உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்ட போதும், இவை அனைத்தையும் இந்தியா தவிடுபாெடியாக்கி உள்ளது. 2015-2025 வரை இந்திய பொருளாதார வளர்ச்சி 2.4 டிரில்லியன் டாலரில் இருந்து 4.3 டிரில்லியன் டாலராக அதிகரித்து உள்ளது. இது 105% வளர்ச்சி. இதே வேகத்தில் சென்றால் இந்தாண்டில் ஜப்பானையும், 2027இல் ஜெர்மனியையும் இந்தியா முந்திவிடும் என IMF கணித்துள்ளது.