News November 24, 2024
லட்டு விவகாரத்தில் விடிய விடிய சோதனை

திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு கலந்ததாக எழுந்த புகாரில் திண்டுக்கல் ஏ.ஆர்.டைரி ஃபுட்ஸ் நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டிருந்தது. அவர்கள் அளித்த நெய்யில்தான் விலங்கு கொழுப்பு இருந்ததாக தேவஸ்தான நிர்வாகம் குற்றம்சாட்டியிருந்தது. இதனையடுத்து, அந்நிறுவனத்தில் 14 மணி நேரமாக நடைபெற்ற உணவுத்துறை அதிகாரிகளின் சோதனை நிறைவு பெற்றிருக்கிறது.
Similar News
News November 13, 2025
BREAKING: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

ஆபரணத் தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று(நவ.13) ஒரே அடியாக ₹1,600 அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1,600 உயர்ந்து ₹94,440-க்கும், கிராமுக்கு ₹200 உயர்ந்து ₹11,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை மீண்டும் ₹94,000 தாண்டியதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News November 13, 2025
பாக்., ராணுவ தளபதிக்கு உச்சபட்ச அதிகாரம்

ராணுவத்துக்கு உச்சபட்ச அதிகாரம் வழங்கும் அரசியல் சாசன 27-வது சட்டத்திருத்தம் பாக்., நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நீதித்துறை முதல் அணு ஆயுதம் வரை பாக்.,கின் உச்சபட்ச அதிகாரங்கள் அனைத்தும் ராணுவ தளபதி கட்டுபாட்டில் வந்தது. பிரதமர் & அதிபர் பதவிகள் இனி அலங்கார பதவிகளாக மட்டும் நீடிக்கும். மேலும், பாக்., சுப்ரீம் கோர்ட் இனி சிவில், குற்ற வழக்குகளை மட்டுமே விசாரிக்க முடியும்.
News November 13, 2025
டெல்லி கார் வெடிப்பு: DNA உறுதியானது

டெல்லி செங்கோட்டை அருகே வெடிபொருள்கள் நிரம்பிய காரை ஓட்டி வந்து, வெடிக்க செய்தது டாக்டர் உமர் நபி தான் என்பது DNA பரிசோதனையில் தெரியவந்துள்ளது. உமரின் உடல் பாகங்களை வைத்து, அவரது தாயாரிடம் செய்யப்பட்ட DNA பரிசோதனையில் உறுதியானது. இதனிடையே உமர் நபி, பாபர் மசூதி இடிப்பு தினமான டிச.6 அன்று பெரிய குண்டுவெடிப்பை நடத்த திட்டமிட்டிருந்தார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


