News August 24, 2024
பெற்ற மகளை வன்கொடுமை செய்த கொடூரன்

பெற்ற மகளையே தந்தை வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலையில் அடிபட்டதாக கூறி எழும்பூர் மருத்துவமனையில் 6 வயது சிறுமி அனுமதிக்கப்பட்டார். அவரை முழு பரிசோதனை செய்ததில் வன்கொடுமைக்கு ஆளானது உறுதியானது. இதனையடுத்து, சிறுமியின் தந்தையான புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த ரவியை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். சமீபகாலமாக சிறுமிகள் வன்கொடுமையால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
Similar News
News November 22, 2025
BREAKING: திமுகவில் இருந்து நீக்கம்

திருவள்ளூர் தொகுதி திமுக MLA வி.ஜி.ராஜேந்திரனின் உதவியாளரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளருமான VS நேதாஜி திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சாலை அமைப்பது உள்ளிட்ட அரசு ஒப்பந்தப் பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நிலையில், கட்சியிலிருந்து நீக்கி துரைமுருகன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
News November 22, 2025
பட்டாம்பூச்சி போல் சிறகு விரித்து பறக்கும் டெல்லி

டெல்லி என்றாலே காற்று மாசு பிரச்னைதான் பலருக்கு ஞாபகம் வரும். ஆனால் அதையும் தாண்டி நம் மனதில் நிற்கும் ஒரு போட்டோவை நாசா வெளியிட்டுள்ளது. விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட அது, பட்டாம்பூச்சி சிறகு விரித்து பறப்பது போல் காட்சியளிக்கிறது. பளிச்சென்று எரியும் மின்விளக்குகள், அதற்கு மத்தியில் ஓடும் யமுனை என டெல்லியின் அழகு காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
News November 22, 2025
மீண்டும் ரெக்க கட்டி பறக்க போகும் ‘அண்ணாமலை’

தமிழில் சூப்பர் ஹிட் அடித்த படங்களை ரீ ரிலீஸ் செய்வது இப்போது டிரெண்டாகி வருகிறது. மக்களும் பழைய படங்களை மீண்டும் திரையரங்கில் பார்த்து கொண்டாடுகின்றனர். அந்த வரிசையில் இப்போது ரஜினியின் அண்ணாமலை படம் மீண்டும் திரைக்கு வருகிறது. ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளையொட்டி , டிசம்பர் 12-ம் தேதி இப்படம் வெளியாகிறது. அசோக்கிற்கு எதிரான அண்ணாமலையின் போராட்டத்தை பார்க்க ரெடியா?


