News March 16, 2024
ரூ.20,000 கோடி சொத்து வைத்திருக்கும் கிரிக்கெட் வீரர்

ரஞ்சிக் கோப்பையில் விளையாடிய பரோடா அணி முன்னாள் வீரரான சமர்ஜித்சிங் கெய்க்வாட், ரூ.20,000 கோடி சொத்துகளுக்கு அதிபதி ஆவார். பரோடா சமஸ்தான மன்னரான ரஞ்சித்சிங் கெய்க்வாட்டின் மகனான இவர்,1987-89 வரை துவக்க வீரராக விளையாடியதோடு, அதன்பிறகு பரோடா கிரிக்கெட் சங்கத் தலைவராகவும் இருந்துள்ளார். தந்தையின் மறைவுக்கு பிறகு, 2012ல் மன்னராக பதவியேற்றதன்மூலம், ரூ.20,000 கோடி சொத்துகளுக்கு அதிபதியானார்.
Similar News
News September 25, 2025
பண மழை கொட்ட போகும் 3 ராசிகள்

வரும் அக்டோபர் மாதத்தில் சுக்கிரன் 4 நிலைகளில் பெயர்ச்சி அடையவுள்ளார். இதனால் அதிக நன்மைகள் பெறும் 3 ராசியினர்: *ரிஷபம்: தொழில் முன்னேற்றம் பெறும், நிதிநிலை மேம்படும், குடும்பத்தில் மகிழ்ச்சி, திருமண யோகம் *தனுசு: திருமண வாழ்வில் மகிழ்ச்சி, குடும்பத்தில் சுப நிகழ்வுகள், புதிய தொழில் வாய்ப்புகள் *கும்பம்: நீண்டகால நிலுவையிலிருந்த பணம் கிடைக்கலாம், முதலீடுகள் லாபம் தரும், தொழிலில் முன்னேற்றம்.
News September 25, 2025
உஷார்! குழந்தைகளை இதுல படுக்க வைக்காதீங்க

குழந்தைகள் தூங்கும் மெத்தைகளில் மூளை வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. Phthalates, flame retardants இருக்கும் சிந்தடிக் மெத்தைகளில் படுக்கும்போது, அவர்களது உடல் வெப்பத்தால் இவை காற்றில் வெளியாகி உடலில் கலக்கிறதாம். எனவே, ஆர்கானிக் பருத்தி, லேடெக்ஸ் மெத்தைகளை பயன்படுத்துமாறு பரிந்துரைக்கின்றனர். குழந்தைகளை காக்க இத எல்லாருக்கும் SHARE பண்ணுங்க.
News September 25, 2025
தெலங்கானாவிலும் காலை உணவு திட்டம்: ரேவந்த் ரெட்டி

தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையை இந்தியா கடைப்பிடிக்க வேண்டும் என தெலங்கானா CM ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், TN-ல் உள்ள காலை உணவுத் திட்டத்தை வரும் கல்வியாண்டில் தெலங்கானாவிலும் செயல்படுத்த உள்ளதாக கூறினார். மேலும், காமராஜர் ஆட்சியில் போடப்பட்ட அடித்தளம் கல்வி, விளையாட்டு உள்ளிட்டவற்றில் தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறினார்.