News April 15, 2024
துறவிகளாக மாற ₹200 கோடி சொத்துகளை துறந்த தம்பதி

குஜராத்தை சேர்ந்த தம்பதி, துறவிகளாக மாற ₹200 கோடி சொத்துகளை தானமாக அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்டுமான நிறுவன அதிபரான பாவேஸ் பண்டாரியும், அவரது மனைவியும் பிப்ரவரி மாதம் 4 கி.மீ. தூரம் ஊர்வலமாக சென்று, சொத்துகளை தானம் அளித்தனர். இந்த மாத இறுதியில் 2 பேரும் ஜைன துறவறம் காணவுள்ளனர். 2022இல் மகளும், மகனும் சிறுவயதில் துறவறம் பூண்டதை பின்பற்றி, இவர்களும் துறவறம் காணவுள்ளனர்.
Similar News
News November 11, 2025
இந்தியாவுடன் வித்தியாசமான ஒப்பந்தம்: டிரம்ப்

இந்தியா உடன் ஒரு நியாயமான ஒப்பந்தம் மேற்கொள்ளும் பணி இறுதி கட்டத்தில் உள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். இந்தியாவுடன் மிகவும் வித்தியாசமான ஒப்பந்தம் செய்ய விரும்புவதாக கூறியுள்ள அவர், இதுதொடர்பாக இந்தியாவுக்கு வந்து PM மோடியை சந்தித்து பேசுவார் என கூறப்படுகிறது. இதன்மூலம், இந்தியா மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரி குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 11, 2025
BREAKING: தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

தங்கம் விலை இன்று(நவ.11) ஒரே நாளில் சவரனுக்கு ₹1,760 அதிகரித்துள்ளது. 22 கேரட் 1 கிராம் ₹11,700-க்கும், சவரன் ₹93,600-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் உயர்வு, இந்திய பங்குச்சந்தைகள் சரிவு உள்ளிட்ட காரணங்களே நம்மூரில் தங்கம் விலை உயர காரணம் என வணிக நிபுணர்கள், தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
News November 11, 2025
டெல்லி குண்டு வெடிப்பு: காரை ஓட்டிய நபரின் PHOTO

டெல்லியில் குண்டு வெடித்த காரை ஓட்டியவர் ஃபரீதாபாத்தில் டாக்டராக பணியாற்றிய ஒமர் முகமது என தெரியவந்துள்ளது. இவருக்கும் ஃபரீதாபாத்தில் வெடிபொருள்களுடன் சிக்கிய கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. தன்னுடைய ஆட்கள் போலீசில் சிக்கியதால் பதற்றமடைந்த ஒமர் முகமது, டெல்லியில் காரை வெடிக்க செய்ததாக கூறுகின்றனர். ஆனால், முன்னதாக மக்கள் அதிகம் கூடும் இடத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனராம்.


