News February 16, 2025
போனால் பரவும் நோய்.. 2 மில்லியன் மக்கள் பாதிப்பு!

நோமோபோபியா என்ற நிலைமை தற்போது மக்களிடம் அதிகமாக பரவி வருகிறது. சிறு வயதில் ஒரு குழந்தையால் பொம்மைகள் இல்லாமல் இருக்க முடியாது. அப்படி தான், வளர்ந்த பிறகு மனிதர்கள் போனுக்கு அடிமையாகி விட்டார்கள். எந்த ஒரு தேவை இல்லை என்ற போதிலும், சராசரியாக ஒவ்வொரு 6 நிமிடத்திற்கு ஒரு முறை, போனை எடுத்து எடுத்து பார்க்கிறோம். இந்த பிரச்னையால் எல்லோருமே தெரிந்தோ, தெரியாமலோ பாதிக்கப்பட்டுள்ளோம்.
Similar News
News November 28, 2025
சமயலறை சாதி கொடூரம்: 6 பேர் குற்றவாளிகள்

திருப்பூர் அருகே 2018-ல் அரசுப்பள்ளியில் பட்டியலின பெண் உணவு சமைப்பதற்கு ஊர் மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த பெண்ணுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சாதிய வன்கொடுமை தொடர்பான வழக்கில், 36 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. 7 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வழக்கில் தொடர்புடைய 4 பேர் உயிரிழந்த நிலையில், 25 பேர் விடுவிக்கப்பட்டனர்.
News November 28, 2025
விஜய் முதல்வராவது உறுதி: செங்கோட்டையன்

தனது மூச்சு உள்ளவரை விஜய்க்கு விசுவாசமாக இருப்பேன் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதிமுக, திமுக ஆகிய 2 ஆட்சிகளையும் மக்கள் விரும்பவில்லை என தெரிவித்த அவர், 2026-ல் விஜய் முதல்வராவார் எனவும் கூறியுள்ளார். மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதற்காக ₹500 கோடி வருவாயை தூக்கி எறிந்துவிட்டு விஜய் வந்துள்ளதாகவும் செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார்.
News November 28, 2025
நாளை பள்ளிகள் விடுமுறை… கலெக்டர்கள் அறிவிப்பு

புயல் எதிரொலியாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை(நவ.28) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நாளை சனிக்கிழமை என்பதால் பள்ளிகளுக்கு வழக்கம்போல் விடுமுறை என்றும், தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் ஏற்கெனவே நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


