News August 5, 2024
விஜய்யின் டீ-ஏஜிங் தோற்றத்தில் மாற்றம்?

‘G.O.A.T’ படத்தில் விஜய்யின் டீ-ஏஜிங் தோற்றத்தை சரி செய்யும் பணியில் இயக்குநர் வெங்கட் பிரபு இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இப்படம், விஜய்யின் டீ-ஏஜிங் தோற்றம் வெளியான பிறகு நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக, “ஸ்பார்க்” பாடலில் விஜய்யின் தோற்றம் ட்ரோல் செய்யப்பட்டது. இந்நிலையில், விஜய்யின் தோற்றத்தில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறதாம்.
Similar News
News March 28, 2026
BIG BREAKING மதுரை வேட்பாளர்கள் அறிவிப்பு

1.திருமங்கலம் – சேடப்பட்டி மு.மணிமாறன்
2.திருப்பரங்குன்றம் – கிருத்திகா தங்கபாண்டி
3.மதுரை மேற்கு – ரகு பாலாஜி
4.மதுரை மத்திய – பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் MLA
5.மதுரை வடக்கு – கோ.தளபதி MLA
6.சோழவந்தான் (தனி) – ஆ.வெங்கடேசன் MLA
7.மதுரை கிழக்கு – பி.மூர்த்தி MLA
8.மதுரை தெற்கு – மதிமுக
9.உசிலம்பட்டி – காங்கிரஸ் (ஓதுக்கீடு)
10.மேலூர் – காங்கிரஸ் (ஓதுக்கீடு)
News March 28, 2026
அமைச்சர்களின் சீட்டை பறித்த ஸ்டாலின்

திமுகவில் அமைச்சர்களாக இருந்த பொன்முடி, மனோ தங்கராஜ், R காந்தி, கயல்விழி ஆகியோர் திமுக வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. 2016, 2021 தேர்தல்களில் மனோ தங்கராஜ் வென்றிருந்த பத்மாநாமபுரம் தொகுதி CPM கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காந்தியின் ராணிபேட்டை தொகுதியில் அவரது மகன் வினோத் காந்தியும், பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதியில் அவரது மகன் கெளதம சிகாமணியும் போட்டியிடுகின்றனர். <<-se>>#TNElection2026<<>>
News March 28, 2026
தாமரை சின்னத்தில் ஜான் பாண்டியன் கட்சி போட்டி

அதிமுக கூட்டணியில் தமமுகவுக்கு ஒதுக்கப்பட்ட ராஜபாளையம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட ஜான்பாண்டியன் மறுத்துள்ளார். கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த ஜான் பாண்டியன், தமமுக தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பாஜக 27, தமாகா 5, தமமுக 1 என மொத்தம் 33 வேட்பாளர்கள் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். <<-se>>#TNElection2026<<>>


