News March 17, 2024
நெக்லெஸ் நெபுலாவில் நிகழ்ந்த மாற்றம்

வான்வெளியில் ஒளிந்து கிடக்கும் ரகசியங்கள் ஏராளம். அந்த வகையில், பூமியிலிருந்து 15,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நெக்லெஸ் நெபுலா கிரகத்தில் தோன்றிய அசாதாரண நிகழ்வை நாசா விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். ஒரு சிறிய, பிரகாசமான பச்சை வாயு மண்டலம், ஒளிரும் அண்டப் பொருட்களின் வளையத்தால் சூழப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட விஞ்ஞானிகள், ஹப்புள் ஸ்பேஸ் தொலைநோக்கி மூலம் இதனை படம்பிடித்ததாக தெரிவித்தனர்.
Similar News
News November 20, 2025
10th பாஸ் போதும்.. ₹18,000 உடன் மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் எல்லை சாலைகள் நிறுவனத்திலுள்ள (BRO) Vehicle Mechanic உள்ளிட்ட 542 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, ITI தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ₹18,000 – ₹63,200 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.24. இது குறித்து மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
News November 20, 2025
தேர்தல் நெருங்கும்போது பெண்களுக்கு ₹10,000: KC

பிஹாரை போன்று தமிழகத்திலும் திமுக அரசு, தேர்தல் நெருக்கத்தில் பெண்களுக்கு ₹10,000 வழங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக காங்., MP கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். பிஹாரில் வாக்கு திருட்டு நடந்ததற்கான தரவுகள் தன்னிடம் இல்லை; அதன் தேர்தல் முடிவுகள் தமிழகத்தை பாதிக்காது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், 2026 தேர்தலில், விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதில் சந்தேகம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
News November 20, 2025
அமைச்சர் துரைமுருகன் ஹாஸ்பிடலில் அனுமதி

மூத்த அமைச்சர் துரைமுருகன் சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காது வலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு ENT சிறப்புக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். வயது மூப்பு காரணமாக ஏற்படும் பாதிப்பு தான் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, ஹாஸ்பிடலில் உள்ள துரைமுருகனை, CM ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து உடல்நலன் குறித்துக் கேட்டறிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


