News June 27, 2024
விளையாடாமலே வெளியேற வாய்ப்பு

இன்று நடைபெறும் டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில், ஆஃப்கானிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது. ஆனால், மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மழை குறுக்கிடும் பட்சத்தில், ஆட்டம் நாளைக்கு மாற்றப்பட்டாலும், அன்றும் மழை காரணமாக விளையாட முடியாத சூழல் ஏற்பட்டால் ஆஃப்கன் அணி வெளியேறிவிடும். ICC விதிகளின்படி, சூப்பர் 8ல் அதிக புள்ளிகளை கொண்ட அணி தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
Similar News
News January 1, 2026
போரில் வெற்றி பெறுவோம்: புடின்

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவே வெற்றிபெறும் என அதிபர் புடின் தெரிவித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு ராணுவ வீரர்களுடன் உரையாடிய அவர், உங்கள் மீதும் நம் வெற்றியின் மீதும் நம்பிக்கை உள்ளதாக அவர் கூறியுள்ளார். உக்ரைனுக்கு எதிராக போராடும் ராணுவ வீரர்களுக்கு மக்கள் ஆதரவு தரவேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனிடையே, 2026 டிச.31 உடன் ஆட்சி அதிகாரத்தில் புடின் 26 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.
News January 1, 2026
அப்துல்கலாம் பொன்மொழிகள்!

*கரைகளைக் கடக்கும் துணிவிருந்தால் தான் புதிய கடல்களை கண்டுபிடிக்க முடியும் *அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்தெடுங்கள். அதுதான் உண்மையான தலைமைப் பண்பு *எல்லா பறவைகளும் மழைக்காலங்களில் கூடுகளில் அடையும். ஆனால் கழுகு, மழையைத் தவிர்க்க மேகத்துக்கு மேலாகப் பறக்கும் *ஒரு தேசத்தின் மகுடமே அதன் சிந்தனையாளர்கள்தான் *மதிப்பீடுகளுடன் கூடிய கல்வி முறையே இன்றைய தேவை
News January 1, 2026
காங்கிரஸுடன் கூட்டணியா? அருண்ராஜ் பதில்

அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை என தவெகவின் அருண்ராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். விஜய்யை CM வேட்பாளராக ஏற்கும் கட்சிகளை கூட்டணியில் அரவணைத்து ஏற்க தயார் என்று அவர் கூறியுள்ளார். காங்கிரஸ், தவெக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா என்ற கேள்விக்கு, உரிய நேரத்தில் அறிவிப்பு வரும் என்றும், கூட்டணி அமைப்பு குழு அமைத்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கும் எனவும் அவர் பேசியுள்ளார்.


