News April 2, 2024
வெள்ள நிவாரணம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் நாளை வழக்கு

மத்திய அரசு வெள்ள நிவாரணம் வழங்காததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நாளை வழக்கு தொடர உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் மற்றும் தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் சென்னை உள்பட 8 மாவட்டங்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்தன. அதனை சீரமைக்க தமிழக அரசு பலமுறை வலியுறுத்தியும் மத்திய அரசு நிதி வழங்கவில்லை எனக் குற்றம்சாட்டிய முதல்வர் ஸ்டாலின் நாளை காலை வழக்கு தொடர உள்ளதாக அறிவித்தார்.
Similar News
News January 1, 2026
புத்தாண்டில் வந்த சோகம்.. 128 பேர் பலி!

2025-ல் உலகளவில் 128 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு(IFJ) கவலை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக இஸ்ரேல்-பாஸ்தீனப் போரில் மட்டும் 56 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் தற்போது உலகம் முழுவதும் 533 பத்திரிகையாளர்கள் சிறையில் உள்ளனர். இதுவெறும் புள்ளிவிவரம் அல்ல, இது நமது சக ஊழியர்களுக்கான உலகளாவிய அபாய எச்சரிக்கை என IFJ தெரிவித்துள்ளது.
News January 1, 2026
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மறுப்பேன்: ஜெலன்ஸ்கி

ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த 20 அம்ச அமைதித் திட்டத்தை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்நிலையில், உக்ரைன் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ஜெலன்ஸ்கி, போர் நிறுத்த ஒப்பந்தம் இறையாண்மையை பாதிக்கும் வகையில் இருந்தால், அதனை ஏற்க மறுப்பேன் என கூறியுள்ளார். மேலும், இந்த போர் முடிவுக்கு வரவேண்டுமே தவிர உக்ரைனுக்கு முடிவு வந்துவிடக் கூடாது எனவும், சரணடையும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
News January 1, 2026
புத்தாண்டில் பிறந்த பீம் பாய்!

தாயின் 4 மணி நேர பிரசவ வலியின் முடிவில், பேரானந்தமாக குழந்தை ஒன்று பிறந்துள்ளது. விசாகப்பட்டினத்தில் ரூபாவதி (26) என்பவருக்கு சுமார் 4.8 கிலோ எடையுள்ள ஆண் குழந்தை சுகப்பிரசவமாக பிறந்துள்ளது. குழந்தையை கண்ட பலரும் ‘பீம் பாய் பொறந்துட்டான்’ என பூரித்து போயுள்ளனர். பொதுவாக சுகப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் 3.1 கிலோ வரை இருக்கும். புத்தாண்டில் இந்த உயிரின் வருகையை உறவினர்கள் கொண்டாடி வருகின்றனர்.


