News August 11, 2024
நீதி கேட்டு போராடியவர்கள் மீது வழக்கா?: அன்புமணி

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு போராடிய அவரது மனைவி, குழந்தை உள்பட 1500க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு தொடர்வது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். CBI விசாரணை கோரி போராடியவர்கள் மீது வழக்கு தொடர்ந்திருப்பது அதிகார அத்துமீறல் எனவும், இது காவல்துறையின் எந்திரத்தனமான செயல்பாட்டை காட்டுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், வழக்கை திரும்பப் பெறவும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News December 25, 2025
அனிருத்துக்கு திருமணம் எப்போது? தந்தை பதில்

அனிருத்துக்கு திருமணம் எப்போது என ரசிகர்கள் தொடர்ந்து SM-களில் கேட்டு வருகின்றனர். இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள அவரது தந்தை ரவி ராகவேந்திரா, இன்று பல பிள்ளைகள் தான் திருமணம் செய்துகொள்கிறேன் என கூறுகிறார்களே தவிர, திருமணம் செய்துகொள்ளவா என கேட்பதில்லை என்றார். எனவே, அனிருத் எப்போது சொல்கிறார் என்று பார்ப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 25, 2025
அன்புமணி ஒரு வழிப்போக்கன்: ராமதாஸ்

டிச.29-ல் சேலத்தில் நடைபெறவுள்ள ராமதாஸால் அறிவிக்கப்பட்ட பாமக பொதுக்குழுவுக்கு அனுமதியில்லை என அன்புமணி தரப்பு கூறியிருந்தது. இந்நிலையில், அன்புமணியை கட்சியில் இருந்தே நீக்கிவிட்டதால், அவர் ஒரு வழிப்போக்கன் சொல்வது போல சொல்லிவிட்டு போகட்டும் என ராமதாஸ் காட்டமாக தெரிவித்துள்ளார். 99% பாமகவினர் தன் பக்கமே உள்ளதால் பொய்யும் புரட்டும் எடுபடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
News December 25, 2025
டிசம்பர் 25: வரலாற்றில் இன்று

*கிறிஸ்துமஸ்
*தேசிய நல்லாட்சி நாள் (Good Governance Day)
*1796 – வேலுநாச்சியார் நினைவுநாள்.
*1924 – அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்தநாள்.
*1968 – கீழ்வெண்மணி படுகொலை.
*1972 – ராஜாஜி நினைவுநாள்.
*1977 – சார்லி சாப்ளின் நினைவுநாள்.


