News April 13, 2024
தேர்தல் பத்திரம் அளித்த நிறுவனம் மீது வழக்கு

ஒப்பந்த பணிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் ஹைதராபாத்தைச் சேர்ந்த மேகா இன்ஜினியரிங் மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்நிறுவனம் தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வழங்கிய 2ஆவது பெரிய நிறுவனமாகும். அதிகபட்சமாக BRSக்கு ₹195 கோடி, திமுகவுக்கு ₹85 கோடி உள்பட ₹966 கோடியை இந்நிறுவனம் தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடையாக அளித்துள்ளது.
Similar News
News February 8, 2026
தங்கம் விலை மிகப்பெரிய அளவில் குறைகிறது!

சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு வலுப்பெற்று வருவதாலும், போர் பதற்றம் மெல்ல மெல்ல குறைவதாலும் 1 சவரன் தங்கத்தின் விலை ₹70,000 ஆக குறைய வாய்ப்பிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த மாற்றம் உடனடியாக நிகழாது என்றும் படிப்படியாக தங்கத்தின் விலை சரிவை சந்திக்கும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அதனால், மொத்தமாக தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்துகின்றனர். உஷார் மக்களே!
News February 8, 2026
மாரடைப்பு வரும்.. இதெல்லாம் செய்யாதீங்க!

மாரடைப்பு என்பது திடீரென ஏற்படும் உடல்நல பாதிப்பு என்றே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அவை தவறு. தினசரி நாம் கடைப்பிடிக்கும் ஒரு சில பழக்கங்கள், நாளடைவில் மாரடைப்பை உண்டாக்குகின்றன. அவை என்னென்ன பழக்கங்கள் என்பதை அறிய மேலே உள்ள போட்டோக்களை இடது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். இந்த பழக்கங்கள் உங்களுக்கு இருந்தா உடனே மாத்திக்கோங்க. ஹெல்தியா இருங்க!
News February 8, 2026
சற்றுமுன்: அதிமுகவில் இணைந்தனர்

தேர்தல் நெருங்குவதால், மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்க பிரதான கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் சேலத்தில் EPS-ஐ சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். அவர்களை கட்சி துண்டு போர்த்தி வரவேற்ற EPS, அவர்களுடன் இணைந்து போட்டோ எடுத்துக்கொண்டார்.


