News March 23, 2025
பைக் ஓட்டி சிக்கிய சிறுவன்… டிராஃபிக் போலீஸ் அதிரடி!

18 வயதுக்குட்பட்டவர்கள் வாகனங்களை இயக்க சட்டம் அனுமதிப்பதில்லை. ஆனால், விதிகளை மீறி சிறுவர்கள் அதிகளவில் பைக் ஓட்டி வருகின்றனர். தூத்துக்குடியில் பைக் ஓட்டிச் சென்ற சிறுவன், வாகன தணிக்கையின்போது டிராஃபிக் போலீசிடம் சிக்கினான். இதனையடுத்து, சிறுவனுக்கு பைக்கை கொடுத்த அவரது தந்தைக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகனச் சட்டத்தை மீறியதாக டிராஃபிக் போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
Similar News
News March 24, 2025
இன்றைய (மார்ச் 24) நல்ல நேரம்

▶மார்ச் – 24 ▶பங்குனி – 10 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 06:30 AM – 07:30 AM & 04:30 PM – 05:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 01:30 AM – 02:30 AM & 07:30 PM – 08:30 PM ▶ராகு காலம்: 07:30 AM – 09:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 01:30 PM- 03:00 PM ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.
News March 24, 2025
திருமணமான ஆண்களுக்கு மட்டும்…

கல்யாணமான ஆண்களுக்கு தொப்பை வளர்வதை நாம் கிண்டல் செய்வதுண்டு. ஆனால், அது உண்மைதான் என்கிறது போலந்து ஆய்வு. பேச்சிலர் ஆண்களைவிட, திருமணமான ஆண்களுக்கு உடல்பருமன் அதிகரிக்கும் வாய்ப்பு 3.2 மடங்கு அதிகமாகிறதாம். ஆனால், பெண்கள் குண்டாவதற்கும் திருமணத்துக்கும் பெரிய தொடர்பில்லையாம். அதனால் என்ன என்கிறீர்களா? உடல்பருமன் அதிகரித்தால் BP முதல் கிட்னி பிரச்சனை வரை எண்ணற்ற நோய்கள் வரும் வாய்ப்பு அதிகமாகும்.
News March 24, 2025
எந்த ராசிக்கு எந்தக் கல்?

ஒருவர் தனது ஜென்ம ராசிக்குரிய ரத்தினக் கல்லை ஜாதக ரீதியாக ஆராய்ந்து அணிந்து கொண்டால் நன்மைகள் ஏற்படும் என சாஸ்திரம் கூறுகிறது. அதன் விவரம் இதோ: ➤மேஷம் – பவளம் ➤ரிஷபம் – பச்சை ஜிர்கான் ➤மிதுனம் – மரகதம் ➤கடகம் – நீல முத்து ➤சிம்மம் – மாணிக்கம் ➤கன்னி – மரகதம் ➤துலாம் – பச்சை மணிக்கல் ➤விருச்சிகம் – செவ்வந்திக்கல் ➤தனுசு – புஷ்பராகம் ➤மகரம் – ஆம்பர் கல் ➤கும்பம் – கோமேதகம் ➤மீனம் – கனக புஷ்பராகம்.