News April 15, 2024
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் மரணம்

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுவன் லோகேஷ், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தில் ஏற்படுத்தியுள்ளது. விதிஷா கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில், கடந்த 12ஆம் தேதி எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தான். 60 அடி ஆழமுள்ள அந்தக் கிணற்றில் சிக்கிய அவனை மீட்க சுமார் 40 மணி நேரத்திற்கு மேலாக மாநில பேரிடர் அவசர மீட்புப் படையினர் முன்னெடுத்த மீட்பு நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தது.
Similar News
News December 3, 2025
5 புதிய பொருள்களுக்கு புவிசார் குறியீடு PHOTOS

தமிழ்நாட்டில் மேலும் 5 புதிய பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழ்நாட்டின் மொத்த புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்ற பொருள்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. 5 புதிய பொருட்கள் என்னென்னவென்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. தமிழகத்தின் பெருமையை SHARE பண்ணுங்க.
News December 3, 2025
ரெட் அலர்ட்.. நாளை பள்ளிகள் விடுமுறையா?

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளதால், வட சென்னை, திருவள்ளூர் பகுதிகளில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சி, செங்கை மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கனமழை எச்சரிக்கையால் இன்று சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து மழை நீடிப்பதால் நாளை விடுமுறை விட வாய்ப்புள்ளது.
News December 3, 2025
டி20 அணியில் இணைந்த சுப்மன் கில்

தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்தால் ஓய்வில் இருந்த சுப்மன் கில் மற்றும் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் அணியில் இணைந்துள்ளனர். சூர்யகுமார் தலைமையிலான அணியில் கில், அபிஷேக், திலக், ஹர்திக், துபே, அக்சர், ஜிதேஷ், சஞ்சு, பும்ரா, வருண், அர்ஷ்தீப், குல்தீப், ராணா, சுந்தர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்..


