News August 23, 2025
82 ஆண்டுகள் கழித்து Library-க்கு வந்து சேர்ந்த புத்தகம்!

USA-ன் சான் ஆன்டோனியோ நூலகத்திலிருந்து 82 ஆண்டுகளுக்கு முன் எடுத்து செல்லப்பட்ட ‘Your Child, His Family and Friends’ புத்தகம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. PAAG என்பவரின் தந்தை, 11 வயதில் இந்த நூலை எடுத்துச்சென்றுள்ளார். தந்தை மறைவுக்கு பிறகு அவரது உடைமைகளில் இந்த புக் இருந்ததை பார்த்த அவர், இதனை நூலகத்தில் ஒப்படைத்துள்ளார். இதற்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தால் ₹78,802 ஆகியிருக்கும்.
Similar News
News August 24, 2025
ராமதாஸ் – அன்புமணி இடையே பூசாரி வேலை பார்ப்பது யார்?

ராமதாஸ் – அன்புமணி இடையே பூசாரி வேலைப் பார்ப்பதில் முக்கியமானவர் வழக்கறிஞர் கே.பாலு என MLA அருள் தெரிவித்துள்ளார். வழக்கறிஞர் எனச் சொல்லிக்கொண்டு அன்புமணியைத் தவறாக வழிநடத்துவதாகவும் கூறினார். பாமக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்களுக்கு நிறுவனர் அழைக்கப்பட வேண்டும் என்பது கட்சியின் விதி என்றும், அதை மறைத்து கே.பாலு போன்றவர்கள் வசதிக்கேற்ப பேசுவதாகவும் அதில் துளியும் உண்மை இல்லை என்றார்.
News August 24, 2025
CM ஸ்டாலினை சந்திக்க வருகிறார் பி.சுதர்சன் ரெட்டி

துணை ஜனாதிபதி தேர்தல் வரும் செப்.09-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கட்சியும், எதிர்க்கட்சி கூட்டணியும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அதன்படி, இந்தியா கூட்டணியின் வேட்பாளராக பி.சுதர்சன் ரெட்டி,
CM ஸ்டாலினை நேரில் சந்திக்க இன்று சென்னை வருகிறார். தி.நகர் அக்கார்ட் ஓட்டலில் மாலை 5 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கோருகிறார்.
News August 24, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 437 ▶குறள்: செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும். ▶ பொருள்: நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும்.