News December 28, 2024

துடுப்பை இழந்த படகு.. கவலை தோய்ந்த முகத்தோடு ராகுல்

image

மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலத்தில் அவரது உடலைக் கொண்டுச் சென்ற ராணுவ வாகனத்தின் மீது கவலை தோய்ந்த முகத்தோடு ராகுல் காந்தி அமர்ந்து சென்றது, மன்மோகன் சிங்குடனான அவரது பந்தத்தை எடுத்துரைக்கிறது. தனது குடும்பத்தில் ஒருவரை இழந்தது போல் வாடியுள்ளார். அதன் வெளிப்பாடே, தனக்கான நல்ல வழிகாட்டியை இழந்துவிட்டேன் என்று தனது முதல் இரங்கலை எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.

Similar News

News September 12, 2025

பகல் 12 மணி வரை.. முக்கிய செய்திகள்

image

*15-வது துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் <<17685622>>சி.பி.ராதாகிருஷ்ணன்<<>>.
*நாளை <<17684789>>மணிப்பூர்<<>> செல்கிறார் PM மோடி.
*வடை மடிக்கவே உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள்: <<17684848>>EPS<<>> தாக்கு
*<<17685166>>தங்கம்<<>> விலை சவரனுக்கு ₹720 உயர்வு.
*USA-ல் <<17684579>>இந்தியர்<<>> வெட்டிக் கொலை. *‘லோகா’ படத்தால் ‘<<17683986>>காந்தா<<>>’ பட ரிலீஸ் தள்ளிவைப்பு.

News September 12, 2025

தமிழகத்தில் பரவும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்

image

பஞ்சாபில், ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால், இவை பாதித்த பன்றிகள் கொல்லப்பட்டு, அவை வளர்ந்த இடங்கள் சுத்திகரிக்கப்பட்டு வருகின்றன. அதேநேரம், கிண்டி உயிரியல் பூங்காவிலும் பன்றிகளுக்கு இந்த காய்ச்சல் பரவியுள்ளதால், அங்கு பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பன்றிகளுக்கு மட்டுமே பரவும் என்பதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.

News September 12, 2025

ECI ஆணையர் என்னுடன் காஃபி குடிக்க விரும்பினார்: சீமான்

image

இந்திய தேர்தல் ஆணையரே தன்னுடன் காஃபி அருந்த ஆசைப்பட்டதாக சீமான் கூறியுள்ளார். ராமநாதபுரத்தில் நடைபெற்ற நாதக நிகழ்வில் பேசிய அவர், கட்சி நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்துக்குச் சென்ற போது, ‘சீமான் வரவில்லையா?’ என ஆணையர் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார். சீமான் சுற்றுப் பயணத்தில் இருப்பதாக நிர்வாகிகள் கூற, தேர்தல் ஆணையத்துக்கு ஒரு டூர் போடலாமே என்று ஆணையர் கேட்டுக் கொண்டதாகவும் பேசியது வைரலாகிறது.

error: Content is protected !!