News October 13, 2025
திமுக அரசுக்கு சவுக்கடி: எல்.முருகன்

கரூர் சம்பவத்தில், திமுக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரியான சவுக்கடி கொடுத்துள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது X பதிவில், கரூர் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றியதும், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் SIT அமைக்க உத்தரவிட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார். விரைவில் கரூர் சம்பவத்தின் உண்மை வெளிவரும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
Similar News
News October 13, 2025
ஊதுபத்தியில் இப்படி ஒரு ஆபத்தா?

வீட்டின் பூஜை அறைகளில் ஊதிபத்தியும் சாம்பிராணியும் பக்தி மணம் பரப்புகின்றன. இருப்பினும், சில வகை ஊதுபத்திகளில் இருந்து வரும் புகை, நமது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானதாக மாறி வருவதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அவற்றில் உள்ள ரசாயன கலப்புகளால், புகையை சுவாசிக்கும் போது நுரையீரல் பாதிப்பு, ஏன் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து கூட உள்ளதாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News October 13, 2025
பணக்கார மாநிலங்கள்: TNக்கு எத்தனையாவது இடம்?

இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தில் குறிப்பிட்ட சில மாநிலங்கள் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது முன்னணியில் உள்ளன. டாப் 5 இடங்களில் தமிழகம் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?. அந்த 5 மாநிலங்கள் எவை எவை, தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் கிடைத்துள்ளது உள்ளிட்ட தகவல்கள் மேலே போட்டோஸாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றாக SWIPE செய்து பாருங்கள்.
News October 13, 2025
₹655 கோடியை வாரிக்குவித்த ‘காந்தாரா சாப்டர் 1’

ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா சாப்டர் 1’ வசூலில் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. 11 நாள்களில் மட்டும் ₹655 கோடியை படம் ஈட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ரஜினியின் கூலி(₹605 கோடி), விஜய்யின் லியோ(₹606 கோடி) ஆகிய படங்களில் ஒட்டு மொத்த வசூலை 11 நாள்களில் காந்தாரா தாண்டியுள்ளது. இதே வேகத்தில் சென்ற விரைவில் படக்குழு 1000 கோடியை தாண்டும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.