News March 19, 2024
தினம் ஒரு தொகுதி: இன்று கன்னியாகுமரி

தமிழகத்தின் தென்கோடி தொகுதியான குமரி, எப்போதும் தேசிய கட்சிகளின் ஆதிக்கம் மிகுந்ததாக உள்ளது. கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய இத்தொகுதியில், சாதிரீதியான வாக்குகளைவிட மதரீதியான வாக்குகளே தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன. இதுவரை இங்கு நடந்த 4 தேர்தல்களில் திமுக 1, காங். (கூட்டணி) 2, பாஜக 1 என வெற்றி பெற்றுள்ளன.
Similar News
News October 31, 2025
BREAKING: நள்ளிரவில் விஜய்க்கு வந்த அதிர்ச்சி

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புஸ்ஸி N.ஆனந்துக்கு தகவல் கிடைத்ததும், பதறியடித்துக் கொண்டு அலுவலகத்திற்கு வந்தார். ஆனால், அவர் உள்ளே அனுமதிக்கப்படாமல் வெளியிலேயே காத்திருக்க வைக்கப்பட்டார். விஜய்க்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
News October 31, 2025
இதுதான் இந்த ஆண்டின் வார்த்தை!

ஒரு ஆண்டில் மக்கள் அதிகமாக பயன்படுத்திய சொல்லை, Word of the year என குறிப்பிட்டு பல பிரபல Dictionary-களும் ஒரு லிஸ்ட்டை வெளியிடுவார்கள். அப்படி, 2025-ம் ஆண்டின் ‘Word of the year’ ஆக ‘67’-ஐ Dictionary.com தேர்வு செய்துள்ளது. US ராப்பர் Skrilla-வின் பாடலான Doot Doot (6 7) என்பதை மக்கள் அதிகமாக பயன்படுத்தியதால், இந்த நம்பர்கள் அங்கீகாரம் பெற்றுள்ளன. நீங்க இந்த வருடம் அதிகமா யூஸ் பண்ண வார்த்தை எது?
News October 31, 2025
ஹிந்து மதம்: JD வான்ஸ் சர்ச்சை கருத்து!

USA-வின் குடியேற்ற சட்டங்கள் குறித்து இந்திய வம்சாவளி பெண்ணுடன் நடந்த <<18155827>>விவாதத்தின்<<>> போது, JD வான்ஸ் கூறிய பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வான்ஸின் மனைவி ஹிந்து என்பதை சுட்டிக்காட்டிய பெண், குழந்தைகளுக்கு எந்த மதம் குறித்து சொல்லி தருகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு வான்ஸ், தனது மனைவி உஷா, ஹிந்து மதத்தில் இருந்து மாறி, கிறிஸ்தவராக வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.


