News February 11, 2025
இறப்பிலும் இணைபிரியாத 67 வருட காதல்

கணவன்-மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதை இறந்த பின்பும் இந்த தம்பதி நிரூபித்து இருக்கிறார்கள். மதுரையில் வீராயி (80) நேற்று முன்தினம் தூக்கத்திலேயே உயிரிழந்தார். ஆசை மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் துக்கத்தில் இருந்த கணவர் முத்து (85), மனைவியை போலவே நேற்று இரவு தூக்கத்திலேயே இறந்துள்ளார். 67 ஆண்டுகள் கணவன் – மனைவியாக வாழ்ந்த தம்பதி இறப்பிலும் இணைபிரியாது அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்துள்ளனர்.
Similar News
News March 3, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹80 குறைந்தது

தங்கம் விலை இன்றும் (மார்ச் 3) குறைந்து பொதுமக்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்துள்ளது. 1 கிராம் தங்கம் ₹10 குறைந்து ₹15,650 -க்கும், 1 சவரன் ₹80 குறைந்து ₹1,25,200-க்கும் விற்பனையாகிறது. கடந்த 2 நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹1,000 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
News March 3, 2026
அதிமுக கூட்டணியில் புதிய கட்சிகள்: EPS

அதிமுக கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வர வாய்ப்புள்ளதாக EPS தெரிவித்துள்ளார். மேலும் அவர், சசிகலாவின் கட்சி அதிமுக கூட்டணிக்கு வருவது குறித்து அமித்ஷாவுடன் ஆலோசிக்கப்பட்டதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அப்படி எதுவும் நடக்கவில்லை என்று முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் தற்போதைய அரசியல் சூழல், தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து மட்டுமே ஆலோசிக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
News March 3, 2026
‘கூட்டணியிலிருந்து விலகுங்கள்’.. மதிமுகவில் குமுறல்

2021-ல் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக 4-ல் வெற்றிபெற்றது. இம்முறை ECI-ன் அங்கீகாரத்தை மீண்டும் பெற 12 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட், தனி சின்னம் கோரிக்கைகளை வைகோ முன்வைத்ததாக தெரிகிறது. ஆனால், உதயசூரியன் என்றால் 4, தனி சின்னம் என்றால் 3 தொகுதிகள் என திமுக சொல்லிவிட்டதாம். இதை ஏற்க முடியாத <<19223088>>மதிமுக <<>>தொண்டர்கள் சிலர், திமுக கூட்டணியிலிருந்து வெளியேறுங்கள் என வைகோவிடம் கூறியுள்ளார்களாம்.


