News May 2, 2024
ஆவின் மோர் விற்பனை 30% அதிகரிப்பு

தமிழகத்தில் கோடை வெயில் கடந்த சில நாள்களாக மக்களை வாட்டி வதைக்கும் நிலையில், ஆவின் மோர் விற்பனை 30% அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில் தினமும் 30,000 பாட்டில் மோர்கள் விற்பனையான நிலையில், இந்தாண்டு 40,000ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பாக்கெட் மோர் விற்பனை கடந்தாண்டு 10,000ஆக இருந்த நிலையில், தற்போது தினமும் 18,000ஆக உயர்ந்துள்ளது.
Similar News
News January 28, 2026
தங்கத்தை விற்கும்போது எச்சரிக்கையாக இருங்கள்!

தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துவரும் நிலையில், தங்கம் விற்பனைக்கான விதிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, தங்க நகைகளை தாமதமாக விற்றால் உங்களின் <<18955748>>வரிச்சுமை<<>> அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், தங்கம் வாங்கும்போது வாடிக்கையாளர்கள் 3% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். ஆனால், பழைய நகைகளை விற்கும்போது, நீங்கள் ஜிஎஸ்டி எதுவும் செலுத்த வேண்டியதில்லை. SHARE IT.
News January 28, 2026
விமான விபத்து.. அமைச்சர் தகவல்

அஜித் பவார் விமான விபத்து குறித்து விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு பேசியுள்ளார். DGCA குழு விசாரணையில், முதலில் தரையிறங்க முயன்றபோது ஓடுபாதை விமானிக்கு தெளிவாக தெரியாததால், 2-வது முறை முயற்சித்தபோது விபத்து ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார். மேலும், பாராமதியில் விமான கட்டுப்பாட்டு கோபுரம் இல்லாததால், அருகிலுள்ள விமானப் பயிற்சி நிறுவனங்களிலிருந்து தகவல்கள் வழங்கப்படுவதாக கூறினார்.
News January 28, 2026
CM ஸ்டாலினை சந்தித்த முக்கிய தலைவர்

உரிய மதிப்பளிக்காததால் NDA கூட்டணியில் இருந்து விலகுவதாக தமிழர் தேசம் கட்சி தலைவர் செல்வகுமார் அறிவித்திருந்தார். இந்நிலையில், CM ஸ்டாலினை சந்தித்த அவர் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததோடு, தேர்தல் வெற்றிக்கு பாடுபடுவோம் என உறுதியளித்திருக்கிறார். மேலும் ‘வலையர் புனரமைப்பு வாரியத்தை’ திருத்தி, அதனை ‘முத்தரையர் மறுவாழ்வு திட்டம்’ என அறிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.


