News March 18, 2024
கண்ணாடியை விரும்பி சாப்பிடும் 3 வயது சிறுமி

வேல்ஸ் நாட்டில் 3 வயது சிறுமி கண்ணாடி துகள்கள், மரத்துண்டுகளை உணவாக சாப்பிடும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிகா சிண்ட்ரோம் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ள வைண்டர் என்ற சிறுமி, கடந்த சில மாதங்களாக கற்கள், பஞ்சு உள்ளிட்ட கையில் கிடைத்ததை எல்லாம் விழுங்கியுள்ளார். எந்த விதமான ஊட்டச்சத்தும் இல்லாத, உணவு அல்லாத பிற பொருள்களைச் சாப்பிடுவதுதான் பிகா சிண்ட்ரோம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
Similar News
News October 31, 2025
விஷாலின் ‘மகுடம்’ படப்பிடிப்பு நிறுத்தம்

விஷாலின் ‘மகுடம்’ படப்பிடிப்பு தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக படத்தில் இருந்து இயக்குநர் ரவி அரசு விலகிய நிலையில், இயக்கும் பணியை விஷால் கையிலெடுத்தார். இந்நிலையில், இயக்குநர் சங்கமும், FEFSI அமைப்பும் சேர்ந்து படப்பிடிப்பை நிறுத்தியுள்ளது. ரவி அரசுவிடம் இருந்து தடையில்லா சான்று (NOC) பெறாமல் படத்தை விஷால் இயக்க கூடாது என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.
News October 31, 2025
இரவில் நீண்ட நேரம் போன் யூஸ் பண்ணும் ஆண்களே.. உஷார்!

மாலை & இரவில் நீண்டநேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை அதிகரிப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு விந்தணுக்களின் எண்ணிக்கை, செயல்திறன் & ஆயுளை பாதித்து, விந்தணுக்களின் DNA-ல் பாதிப்பையும் ஏற்படுத்துகிறதாம். இந்தியாவில் 23% ஆண்களுக்கு மலட்டுத்தன்மை உள்ளதாக WHO கூறுகிறது. ஆண்களே, போன் பயன்படுத்துவதை கொஞ்சம் குறைக்கலாமே!
News October 31, 2025
குழந்தைகளின் உடல்நலனுக்கு 5-2-1-0 ஃபார்முலா

குழந்தைகளின் உடல்நலனுக்கு 5-2-1-0 ஃபார்முலாவை பின்பற்றுவது அவசியம் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.*0 என்றால் தண்ணீர் அல்லது பால் தவிர வேறு பானங்களை அருந்தக் கூடாது. *தினமும் 1 மணி நேரமாவது குழந்தைகள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். *2 மணி நேரத்திற்கும் குறைவாக எலக்ட்ரானிக் சாதனங்கள் பயன்பாடு. *தினமும் 5 வகையான காய்கறிகள் அல்லது பழங்கள் சாப்பிட்டால் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும்.


