News March 16, 2024
125 வயது ஆமை இறந்து போனது

ஐதராபாத்தின் நேரு உயிரியல் பூங்காவில் வாழ்ந்துவந்த 125 வயது ஆண் ஆமை இன்று உயிரிழந்தது. வயோதிகம் காரணமாக உறுப்புகள் செயலிழந்து ஆமை மரணித்ததாக பூங்கா மருத்துவர் தெரிவித்திருக்கிறார். கடந்த 10 நாட்களாக உணவருந்தாமல் அவதியுற்றுவந்த ஆமை இன்று உயிரிழந்தது. இந்த ஆமையுடன் 95 வயதான மற்றொரு ஆமையும் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 19, 2025
கேப்டனாக கில் படைத்த மோசமான சாதனை

3 வடிவிலான கிரிக்கெட்டிலும் சுப்மன் கில் கேப்டனாக செயல்பட்ட முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியே தழுவியுள்ளது. 2024-ம் ஆண்டு டி20-ல் ஜிம்பாப்வே, டெஸ்டில் இங்கிலாந்து மற்றும் ODI-ல் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக இந்தியா தோற்றதால் கேப்டன்ஸியில் மோசமான சாதனைக்கு கில் சொந்தக்காரர் ஆகியுள்ளார். இப்பட்டியலில் ஏற்கெனவே விராட் கோலி, ஷான் பொல்லாக், தில்ஷன், முகமது ரிஸ்வான் உள்ளிட்ட வீரர்களும் அடங்குவர்.
News October 19, 2025
பண மழை கொட்டும் 5 ராசிகள்

குரு பகவன் அதிசார நிலையில், நேற்று (அக்.18) கடக ராசிக்குள் நுழைந்துள்ளார். இதனால், 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டுமாம். *மிதுனம்: நிதி ஆதாயம் பெருகும். *சிம்மம்: வேலை, வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படலாம். *கன்னி: தொழிலில் லாபம் பல மடங்கு அதிகரிக்கும். தொட்டதெல்லாம் வெற்றியடையலாம். *துலாம்: வேலையில் சம்பள உயர்வு, வியாபாரத்தில் பெரிய வெற்றி கிடைக்கும். *விருச்சிகம்: நிதி நிலைமை வலுவாக இருக்கும்.
News October 19, 2025
எங்க இருந்தீங்க இவ்ளோ நாளா?

‘இதுதான்யா உண்மையான சொர்க்கம்’ என்று சென்னைவாசிகள் சொந்த ஊர் காற்றை தற்போது சுவாசித்து வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு, கடந்த 3 நாள்களில் மட்டும் 9.5 லட்சம் பேர் சிறப்பு ரயில்களிலும், 6.15 லட்சம் பேர் அரசு பஸ்களிலும், ஆம்னி பஸ்களில் 2 லட்சம் வரையிலும், சொந்த வாகனங்களில் 1.5 லட்சம் பேர் என மொத்தம் 19.15 லட்சம் பேர் சொந்த ஊர் சென்றுள்ளனர். இதை கேட்கும் போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?