News March 23, 2026

A-10 தண்டர்போல்ட்-ஐ களமிறக்கிய அமெரிக்கா

image

அமெரிக்கா தனது பழமையான A-10 தண்டர்போல்ட் II போர் விமானத்தை களமிறக்கியுள்ளது. பறக்கும் டாங்க் என்று அழைக்கப்படும் இது ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஈரானின் அதிவேக கப்பல்களை துல்லியமாக தாக்க பயன்படுத்தப்படுகிறது. குறைந்த உயரத்தில் மெதுவாக பறந்து துல்லியமாக தாக்குவதில் இதற்கு ஈடு இணை எதுவும் இல்லை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும், இது நவீன விமானங்களை விட செலவு குறைந்ததாக உள்ளதாம்.

Similar News

News March 29, 2026

தவிர்க்க முடியாத அரசியல் படங்கள்.. உங்கள் சாய்ஸ்?

image

4 முனை போட்டியுடன் தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதனை மேலும் சூடாக்க ‘அமைதிப்படை’ என்ற அரசியல் கல்ட் படம் ரீ-ரிலீஸாகவுள்ளது. இப்படத்தின் தாக்கம் இன்றைய அரசியலுக்கும் ஏற்றார்போல் உள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், சில சிறந்த அரசியல் தமிழ் படங்களை மேலே போட்டோஸாக கொடுத்துள்ளோம். அதை இடப்பக்கமாக swipe செய்து பார்த்துவிட்டு, மிஸ்ஸான படங்களை கமெண்ட் பண்ணுங்க.

News March 29, 2026

லாக் டவுன்? பிரதமர் மோடி மவுனம் கலைத்தார்

image

மேற்காசிய போர்ச் சூழலால் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இது மீண்டும் கொரோனா போன்ற சூழலை உருவாக்கியுள்ளதால், இந்தியாவில் லாக் டவுன் போட வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவின. இந்நிலையில், இதுபோன்ற வதந்திகளை பரப்பி சிலர் நாட்டிற்கு தீங்கு விளைவிப்பதாக PM மோடி எச்சரித்துள்ளார். ‘மன் கி பாத்’ நிகழ்வில் பேசிய அவர், தவறான தகவல்களால் வழிதவறி விட வேண்டாம் என்றும் அவர் நாட்டு மக்களை கேட்டுக் கொண்டார்.

News March 29, 2026

மகளிர் உரிமைத்தொகை.. புதிய விண்ணப்பம் எப்போது?

image

மகளிர் உரிமைத்தொகைக்கு புதிய விண்ணப்பம் எப்போது தொடங்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்போதும் பலர் கலெக்டர் ஆபீஸ்களில் மனு அளிக்க செல்கின்றனர். திமுக (அ) அதிமுக யார் ஆட்சி அமைத்தாலும் ஜூன் மாதத்திற்கு பிறகே புதிய பயனாளிகள் சேர்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும். தேர்தல் என்பதால் கலெக்டர் ஆபீஸ்களில் மக்கள் குறைதீர்ப்பு முகாம்களும் நடைபெறாது. அடுத்த 2 மாதங்களுக்கு புதிய விண்ணப்பங்கள் இருக்காது.

error: Content is protected !!