News November 22, 2024
யானைகள் தாக்கியதில் ஓராண்டில் 13 பேர் பலி

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், ஆசனூர் என இரு வனக் கோட்டங்களில் 10 வனச் சரகங்கள் உள்ளன. 1,455 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த புலிகள் காப்பகத்தில் தலமலை வனப் பகுதி யானைகளின் முக்கிய வழித்தடமாக உள்ளது. புலிகள் காப்பகத்தில் யானைகள் தாக்கியதில் ஓராண்டில் மட்டும் 13 போ் உயிரிழந்துள்ளதாக வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
Similar News
News August 17, 2025
ஈரோடு: 8 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை!

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற குடற்புழு நீக்க முகாமில் மொத்தமாக 8 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது. கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற தேசிய குடற்புழு நீக்க தின முகாமில் 2080 அங்கன்வாடி மையங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட 1,10,886 குழந்தைகளுக்கும், பள்ளி, கல்வி நிறுவனங்கள் மூலம் 5,28,766 மாணவ, மாணவிகளுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டது.
News August 17, 2025
ஈரோடு: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்தால் வேலை!

ஈரோடு: பவானிசாகர் மீன்வளத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும், நீச்சல் மற்றும் மீன்பிடி வலை தொடர்பான திறன்கள் அவசியம். மேலும் விவரங்களுக்கு,பவானியில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தை நேரடியாகத் தொடர்புகொள்ளலாம் அல்லது 04295-299261 என்ற எண்ணை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். இதை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்.
News August 17, 2025
ஈரோடு: இரண்டு சிறுவர்கள் கைது

ஈரோடு, சித்தோடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நசியனூர் பகுதியில், ஆன்லைன் மூலமாக போதை மாத்திரைகளை ஆர்டர் செய்து, 250 போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், பிரபல கொரியர் நிறுவனம் ஒன்றில் சோதனை செய்த போது, போதை மாத்திரை இருந்தது தெரிந்தது. இது தொடர்பாக 2 சிறுவர்களை பிடித்த போலீசார், மாத்திரைகளை பறிமுதல் செய்து, வழக்கு பதிந்துள்ளனர்.