News November 22, 2024
கலை உபகரணங்கள் வழங்குகிறார் கூடுதல் ஆட்சியர்

கலை பண்பாட்டு துறை சார்பில், இசைக்கருவிகள் மற்றும் கலை உபகரணங்கள் வழங்கும் விழா, விழுப்புரம் அரசு இசைப்பள்ளி வளாகத்தில் வரும் சனிக்கிழமை (நவ.23) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஈச்வரன் பட்டதிரி தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் கலந்து கொண்டு கலை உபகரணங்களை வழங்குகிறார் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஷேர் செய்யுங்கள்.
Similar News
News August 6, 2025
விழுப்புரத்தில் மாபெரும் வேலைவாயப்பு முகாம்

விழுப்புரம் ஊரக வாழ்வாதார இயக்கம்&வெற்றி நிச்சயம் திட்டம் சார்பில் வரும் ஆக.9 அன்று செஞ்சி ஸ்ரீ ரங்கபூபதி கலை&அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் 15,000-க்கும் மேற்பட்ட ஆட்களை தேர்வு செய்கின்றன. 8th, 10th, 12th,ITI,DIP.,UG,PG, BE படித்தவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். தகவலுக்கு 9787928247, 8248727719, 9080674133. *ஷேர் பண்ணுங்க
News August 6, 2025
விழுப்புரம் தாசில்தார் மீது புகாரளிப்பது எப்படி?

விழுப்புரம் மக்களே வருமானம், சாதி, குடிமை, குடியிருப்பு&மதிப்பீடு சான்றிதழ் வாங்க, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04146-259216) புகாரளிக்கலாம். இந்த முக்கிய தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்
News August 6, 2025
விழுப்புரம் மாவட்ட மழை பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக முகையூரில் 100 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கிடார் பகுதியில் 43 மி.மீ., விழுப்புரம் 38 மி.மீ., அரசூர் 37 மி.மீ., மரக்காணம் 30 மி.மீ., வல்லம் 25 மி.மீ., வானூர் 15 மி.மீ., திண்டிவனம் 14 மி.மீ. மற்றும் செஞ்சியில் 10 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது.