News November 22, 2024
பராமரிப்பு பணி காரணமாக 28 ரயில் சேவைகள் ரத்து

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள், தற்காலிகமாக ரத்து செய்யப்படவுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணி காரணமாக, கடற்கரையில் இருந்து புறப்படும் 14 ரயில்கள், தாம்பரத்தில் இருந்து புறப்படும் 14 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மற்ற 200 ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும். வழக்கமாக இயக்கப்படுவதைவிட 5 – 10 நிமிஷம் தாமதமாக இயக்கப்படும். ஷேர் செய்யுங்கள்.
Similar News
News September 5, 2025
சென்னை: பெண்களுக்கு முக்கிய எண்கள்

பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் காவல் துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ▶️அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையம்-044-23452726. ▶️எழும்பூர்-044-28455168. ▶️கிண்டி-044-24700011. ▶️புளியந்தோப்பு -044-23452523. ▶️தி,நகர்-044-23452614. இந்த எண்களை அனைத்து பெண்களுக்கும் ஷேர் செய்து, பதிவு செய்ய சொல்லுங்கள்.
News September 5, 2025
சிறப்பு ரயில்கள் இயக்க பரிந்துரை

தீபாவளியை முன்னிட்டு 11 சிறப்பு ரயில்களை இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், தீபாவளிக்கு சென்னையில் இருந்து புறப்படும் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது. முக்கிய ரயில்களில் காத்திருப்போர் எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளது. எந்தெந்த ரயில்களுக்கு தேவை அதிகமாக உள்ளது என ஆய்வு செய்து சிறப்பு ரயில்இயக்கப்படும் என்றனர்.
News September 5, 2025
சென்னை: பெட்ரோல் தரமாக இல்லையா?

சென்னை வாசிகளே, உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் நீங்கள் வாகனங்களில் போடும் பெட்ரோல் தரமானதாக இல்லையா?
▶️இந்தியன் ஆயில் – 18002333555
▶️BHARAT பெட்ரோல் – 1800 22 4344
▶️H.P பெட்ரோல் – 91-44-24999501 என்ற எண்களை அழைத்து புகார் அளிக்கலாம். (பைக், கார் வைத்துள்ளவர்களுக்கு SHARE பண்ணுங்க)