News November 22, 2024
அதானியை அமெரிக்கா கைது செய்யுமா?

சூரிய சக்தி மின் ஒப்பந்தத்தைப் பெற முறைகேட்டில் ஈடுபட்ட கவுதம் அதானியை கைது செய்ய நியூயார்க் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. ரகசிய நடவடிக்கைகள், நாடுகடத்தல் ஒப்பந்தம் மூலம் மட்டுமின்றி Extraordinary Rendition முறையிலும் அவரை அமெரிக்காவில் கைது செய்ய முடியும் என்கிறார்கள். அந்நிய நாட்டின் அனுமதி இல்லாமல் அந்நாட்டில் உள்ள குற்றவாளி மீது CIA ஆக்ஷன் எடுத்த கடந்த வரலாறுகள் இருக்கின்றன.
Similar News
News January 5, 2026
பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் உரிமம் இத்தனை கோடியா?

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பாலையாவின் பகவந்த் கேசரியின் ரீமேக் என்பது டிரெய்லர் மூலம் உறுதியானது. இதை H வினோத் எப்படி எடுத்திருப்பார் என SM-ல் பெரும் விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனிடையே ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் உரிமையை ₹4 கோடிக்கு ‘ஜனநாயகன்’ படக்குழு வாங்கியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பாலையாவின் பார்முலா விஜய்க்கு வொர்க் அவுட் ஆகுமா?
News January 5, 2026
காரைக்குடி தொகுதியில் போட்டியா? சீமான்

பல தொகுதிகளுக்கான நாம் தமிழர் வேட்பாளர்களை சீமான் அறிவித்துவிட்டார். இதனிடையே அவர் காரைக்குடியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது திருச்சி மாநாட்டில், தான் போட்டியிடும் தொகுதி குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்தார். கூட்டணி இல்லாமல் வெற்றி பெற முடியாது என்பது பொய் என்றும், ஜெயலலிதா, கெஜ்ரிவால் ஆகியோர் தனித்து நின்று வெற்றி பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
News January 5, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 5, மார்கழி 21 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:30 AM – 7:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்:10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: துவிதியை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்


