News November 22, 2024
சிக்கன் சாப்பிட்ட 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சிக்குட்பட்ட நெய்க்காரப்பட்டியில் நேற்று தனியார் ஹோட்டலில் கிரில் சிக்கன், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 5 பேர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அடுத்தடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இது குறித்து பழனி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மூலம் ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News December 7, 2025
திண்டுக்கல் 22,000 வாக்காளர்கள் நீக்கம்?

அம்பேத்கரின் 70-வது நினைவு தினத்தையொட்டி, திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்த அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆத்தூர் தொகுதியில் ஒரே இரவில் ‘ஆப்சென்ட்’ எனக்கூறி 6,000 பேர், இறந்தவர்கள் எனக்கூறி 16,000 பேர் என மொத்தம் 22,000 பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பினேன் என தெரிவித்துள்ளார்.
News December 7, 2025
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (06.12.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.