News November 22, 2024
பிரபல சீர்காழி சத்யாவுக்கு பிடிவாரண்ட்

திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என பிரபல ரவுடி சீர்காழி சத்யாவுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிபந்தனைகளை அவர் நிறைவேற்றாததால், அவரை மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர் மீது 5 கொலை உள்பட 32 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
Similar News
News January 9, 2026
செங்கை: 250 கோழிகள் இலவசம்!

செங்கல்பட்டு மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News January 9, 2026
செங்கை: ஒரே இரவில் 20 வாகனங்கள் சூறை

சிங்கப்பெருமாள் கோவில் – ஸ்ரீபெரும்புதூர் சாலையில் தெள்ளிமேடு, ஆப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் நேற்றிரவு உடைத்து சேதப்படுத்தினர். மேலும், சில வாகனங்களின் பேட்டரிகளும் திருடப்பட்டுள்ளன. இந்தத் துணிகரச் சம்பவம் வாகன உரிமையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News January 9, 2026
செங்கை: சிலிண்டர் மானியம் – ஒரே ஒரு SMS போதும்!

உங்களுக்கு கேஸ் சிலிண்டர் மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.


