News November 22, 2024
ருத்ராட்சத்தை யார் எல்லாம் அணியலாம்?

1 முதல் 27 முகங்கள் கொண்ட ருத்ராட்சத்தை ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் யார் வேண்டுமானலும் அணியலாம். பெண்கள் அணிவதற்கு சில வரையறைகள் உள்ளன. அதை முறையாக பின்பற்றி அணிந்து கொள்வது நலம். ருத்ராட்சத்திற்கு இயல்பாகவே மருத்துவ குணங்கள் நிறைய உண்டு. ஆனால், ருத்ராட்சத்தை தங்கம் அல்லது வெள்ளியில் கட்டி அணியும் போது, மந்திர உபதேசம் பெற்று, குருநாதர் கையில் இருந்து வாங்கி அணிய வேண்டும்.
Similar News
News August 15, 2025
கிருஷ்ணகிரியில் தலைமை ஆசிரியருக்கு விருது

கிருஷ்ணகிரி சுதந்திர தின விழாவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பொதுதேர்வில் 100% தேர்ச்சி பெற்றுத்தந்த தலைமையாசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர் பட்டம் வழங்கப்பட்டது. இதன்படி பையர்நத்தத்தை சார்ந்த தலைமை ஆசிரியர் குபேந்திரனுக்கு சிறந்த ஆசிரியர் பட்டம் வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து, பல்வேறு தரப்பினரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
News August 15, 2025
கிருஷ்ண ஜெயந்தியில் எப்படி வழிபட வேண்டும்!

★வீட்டின் அனைத்து இடங்களிலும், தீர்த்த பொடியை(பச்சைக் கற்பூரம் & ஏலக்காய்) தெளிப்பது மிகவும் விசேஷமானதாகும்.
★அரிசி மாவினால் கோலமிட வேண்டும்.
★கிருஷ்ணருக்கு துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
★அஷ்டமி அன்று முடிந்த தானத்தை பிறருக்கு செய்யுங்கள்.
★பூஜைக்கு நெய்வேத்தியமாக வெண்ணெய், சர்க்கரை, அவல், முறுக்கு, சீடை, இனிப்பு சீடை, அதிரசம் தேன்குழல் போன்ற பலகாரங்களை படைக்கலாம்.
News August 15, 2025
கேரள நடிகை போக்சோவில் கைது.. திடுக்கிடும் தகவல்

கைதான <<17400462>>நடிகை மினு முனீர்<<>> பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன் தனது உறவுக்கார சிறுமியை சீரியலில் நடிக்க வைப்பதாக சென்னை அழைத்து வந்துள்ளார். தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்ட சிறுமியிடம் மினு முனீர் அனுமதியுடனே 4 பேர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சிறுமி கொடுத்த புகாரின்பேரில், நடிகை கைதாகியுள்ளார். அந்த 4 பேரையும் கைது செய்யும் பணி நடைபெற்று வருகிறது.