News March 21, 2024

சேலம்: வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

image

சேலம், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிகளில் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் சேலத்தில் நடைபெற்றது.சேலம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் டி.எம்.செல்வகணபதி, கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மலையரசன் ஆகியோரை அமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார், கூட்டத்தில், இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News August 31, 2025

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான பாதுகாப்பு அறிவுரை

image

சேலம் மாநகர் காவல்துறை, இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை பாதுகாப்பை முதன்மையாகக் கருதி பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. பயணத்திற்கு முன் வாகனத்தைச் சரிபார்த்தல், முழுக்கவச ஹெல்மெட் அணிதல், வேக வரம்புகளை கடைபிடித்தல், பிரதிபலிப்பு ஜாக்கெட் மற்றும் வெளிர் நிற உடைகள் அணிதல், மேலும் வாகனங்களுக்கு இடையில் பாதுகாப்பான தூரம் பேணுதல், போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளது.

News August 31, 2025

சேலம் மாநகர் காவல்துறை – சிறுவர் வாகனம் ஓட்ட தடை!

image

சேலம் மாநகர் காவல்துறை சிறுவர் வாகன ஓட்டத்துக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தியது. 18வயதுக்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்/பாதுகாவலர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 12 மாதங்களுக்கு வாகன RC ரத்து, 3 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும். சிறுவர்களுக்கு 25 வயது வரை உரிமம் வழங்கப்படாது. பொதுமக்கள் சாலை பாதுகாப்புக்காக இதனை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

News August 31, 2025

பதிவறை எழுத்தர் பணி விண்ணப்பிக்க அழைப்பு!

image

பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில், காலியாக உள்ள ஒரு பதிவறை எழுத்தர்(ஆர்.சி.,) பணியிடத்தை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல், 37 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். செப்.1 முதல், 30 வரை, இணைய வழியில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!