News March 21, 2024
புதுச்சேரி : அட்டை காண்பித்தால் மட்டுமே அனுமதி

புதுவையில் நாடாளுமன்ற தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதனால் புதுவை சட்டப்பேரவைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பேரவைக்குள் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டபேரவை ஊழியர்கள் அடையாள அட்டை காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். தேர்தல் முடியும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என சட்டப்பேரவை அலுவலகம் அறிவித்துள்ளது.
Similar News
News January 13, 2026
புதுவை: திருக்கனூர் விபத்து வழக்கு CBCID-க்கு மாற்றம்

புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் பகுதியில் நடந்த விபத்து தொடர்பான வழக்கு சிபிசிஐடி (CBCID) விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆதாரமின்றி பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. போலீசார் பதிவு செய்த வழக்கு தற்போது சிபிசிஐடி கையில் எடுக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் சிபிசிஐடி விசாரணையில் புதிய ஆதாரங்கள் வெளியாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 13, 2026
புதுவை: உங்கள் தொகுதி MLA நம்பர் இருக்கா?

உங்கள் பகுதி பிரச்சனையை நேரடியாக உங்கள் பகுதி பிரதிநிதியிடம் தெரிவிக்கலாம். சட்டமன்ற உறுப்பினர்கள் எண்கள்: 1.உப்பளம், அனிபால் கென்னடி – 9488483330, 2.அரியாங்குப்பம், பாஸ்கர் – 9443468258, 3.காமராஜ் நகர், ஜான் குமார் – 9655680961, 4.காரைக்கால் தெற்கு, நாஜிம் – 9585400500, 5.காரைக்கால் வடக்கு, திருமுருகன் – 9344488811, 6.நெடுங்காடு, சந்திர பிரியங்கா – 9443629191. இந்த தகவலை பிறருக்கு ஷேர் செய்யவும்!
News January 13, 2026
புதுச்சேரி: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தென்கிழக்கு வங்கக் கடல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காரணமாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், காரைக்காலில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (ஜன.13) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


