News March 21, 2024

குமரி: கோவில் பூஜையில் கலந்து கொண்ட மேயர்

image

நாகர்கோவில் அருகே அமைந்துள்ள பறக்கை ஸ்ரீதேவி பூதேவி சமேத மதுசூதன பெருமாள் கோயில் பங்குனி பெருந்திருவிழா மார்ச்-15 தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பூஜையில் சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். உடன் மாவட்ட இந்து சமய அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News

News August 13, 2025

திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

image

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவுமண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பாலம் ஆகியவற்றை காண தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு (இன்று ஆக.13) துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News August 13, 2025

குமரி: இந்த App-ஐ உடனே Download பண்ணுங்க.!

image

மத்திய அரசு ‘சஞ்சார் சாதி’ எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மோசடி, தொலைந்து போன அல்லது திருடு போன மொபைல் இணைப்புகளை கண்டறிய, டிஜிட்டல் மோசடி குறித்து இந்த ஆப்-ல் புகார் அளிக்கலாம். இந்த ஆப் மூலம் திருடு போன லட்சக்கணக்கான போன்கள் கண்டுபிடிக்கப்பட்டும், மோசடிகளுக்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த App நம் எல்லாருக்கும் மிக மிக அவசியம். உடனே இந்த <>*லிங்கை கிளிக்<<>> செய்து டவுன்லோட் பண்ணுங்க.!

News August 13, 2025

குமரி: ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை..!

image

கன்னியாகுமரி, பெருவிளையில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய செவிலியர் – 25, மருந்தாளுநர் -1, ஆய்வக நுட்புநர் – 3, பல்நோக்கு பணியாளர் – 3, ஆலோசகர் – 1 உள்ளிட்ட பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுள்ளவர்கள் <>இந்த லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 25.08.2025க்குள் விண்ணப்பிக்கவும். #SHARE

error: Content is protected !!