News November 21, 2024
கோவை: இரவு நேர ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (நவ.21) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று கோவை மாநகர போலீசார் தங்களது முகநூல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளனர்.
Similar News
News December 9, 2025
கோவை அருகே வாய்க்காலில் பெண் சடலம்!

சுல்தான்பேட்டை போகம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் மனைவி மகேஸ்வரி(35). இவர்களுக்கு கனிஷ்கா ஸ்ரீ (3)என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால், மகேஸ்வரி தனது குழந்தையை அழைத்து கொண்டு மாயமானார். இந்நிலையில் மகேஸ்வரியின் சடலம் அவிநாசிபாளையத்தில் பிஏபி வாய்க்காலில் மீட்கப்பட்டுள்ளது. அவர் அழைத்து சென்ற அவரது குழந்தை குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 8, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (08.12.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 8, 2025
கோவை மத்திய சிறையில் தண்டனை கைதி உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் பூஞ்சோலை ஜீவா நகரை சேர்ந்தவர் முருகன்(57). இவர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த 5 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக, கோவை ஜிஎச்சில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார். இதுகுறித்து சிறை வார்டன் சரவணகுமார் அளித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.


