News November 21, 2024
‘விடுதலை-2’ டிரெய்லர் ரிலீஸ் தேதி

‘விடுதலை-2’ படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ லான்ச் நவம்பர் 26ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சிமா மோகன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. முதல் பாகத்தின் வெற்றியையடுத்து இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. யாரெல்லாம் இப்படத்திற்கு வெயிட்டிங்?
Similar News
News August 15, 2025
MH-ஐ ஆண்மையற்றதாக மாற்றுகிறார்கள்: சிவசேனா MP

சுதந்திர தினத்தில் மும்பையின் சில பகுதிகளில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிவசேனா (UBT) MP சஞ்சய் ராவத், அரிசி சோறும் நெய்யும் சாப்பிட்டு சத்ரபதி சிவாஜி போருக்குச் செல்லவில்லை, இறைச்சி சாப்பிட்டே சென்றார் எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தற்போதைய அரசு மகாராஷ்டிராவை ஆண்மையற்றதாக மாற்றுவதாகவும் விமர்சித்துள்ளார். இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
News August 15, 2025
கவர்னர் மாளிகையில் சுதந்திர தினக் கொண்டாட்டம்

நாட்டின் 79-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கிண்டி ராஜ்பவனில் கவர்னர் R.N.ரவி மூவர்ணக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு வந்திருந்த குழந்தைகள் உள்பட பலருக்கும் அவர் இனிப்புகளை வழங்கினார். தொடர்ந்து, காந்தி நினைவிடத்திற்குச் சென்று பூங்கொத்து வைத்து மரியாதை செலுத்தினார். <<-se>>#HappyIndependenceday<<>>
News August 15, 2025
‘கூலி’ OTT ரிலீஸ் அப்டேட்!

ரஜினி- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ஆரவாரமாக வெளிவந்துள்ள ‘கூலி’ திரைப்படம் <<17409522>>வசூலில் <<>>பட்டையை கிளப்பி வருகிறது. படத்திற்கு ‘A’ சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளதால், ஃபேமிலி ஆடியன்ஸ் தியேட்டருக்கு வர முடியாத நிலை உள்ளது. அவர்கள் படத்தின் OTT உரிமத்தை அமேசான் பிரைம் கைப்பற்றியுள்ள நிலையில், படம்
செப்டம்பரில் முதல் வாரத்தில் OTT-ல் வெளியாகும் என கூறப்படுகிறது. நீங்க படத்தை எதில் பார்க்க போறீங்க?