News November 21, 2024
திருச்சியில் பெண் உட்பட 4 பேர் கைது

புதுக்கோட்டையை சேர்ந்த ஷேக் மொய்தீன், இவர் துபாய் செல்வதற்காகவும், தஞ்சாவூரை சேர்ந்த வெள்ளையம்மாள் இவர் சிங்கப்பூர் செல்வதற்காகவும் சிவகங்கையை சேர்ந்த திருநாவுக்கரசு, ராமநாதபுரத்தை சேர்ந்த அகமது மொய்தீன் ஆகியோர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தடைந்தனர். இவர்கள் போலி ஆவணம் கொடுத்து பயணம் செய்தது தெரியவந்தது. ஏர்போர்ட் போலீசார் நால்வரையும் கைது செய்து விசாரணை செய்கின்றனர்.
Similar News
News December 7, 2025
திருச்சில் அரிய வாகை ஆமைக் குஞ்சுகள் பறிமுதல்

சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவுபிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, அதில் மலேசியாவை சேர்ந்த இரு பயணிகள் கடத்திவந்த 5,061 ஆமைக்குஞ்சுகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து ஆமைக்குஞ்சுகளை கடத்திவந்த இரண்டு பேரிடமும் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
News December 7, 2025
திருச்சி: ATM பயன்படுத்துவோர் கவனத்திற்கு..

திருச்சி மக்களே, நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால் <
News December 7, 2025
திருச்சி: சொந்த வீடு கட்ட அரசின் சூப்பர் ஆஃபர்

சொந்த வீட்டின் கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள சொந்த வீடு இல்லாதவர்கள், <


