News November 21, 2024

ஈரோடு மாவட்டத்தில் 19.64 இலட்சம் வாக்காளர்கள்

image

ஈரோடு மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் படி 19 லட்சத்து 64,676 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 9 லட்சத்து 50,706 ஆண்கள், 11 லட்சத்து 1,378 பெண்கள், 3ம் பாலினத்தவர் 181 பேர் உள்ளனர். மேலும், 30 வயதுக்கு கீழ் இளம் வாக்காளர்கள் 3 லட்சத்து 22,466 பேர் உள்ளனர். மேலும், வரும் 23, 24 தேதியில் வாக்காளர் முகாம் நடக்க உள்ளது என தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.

Similar News

News December 8, 2025

பெருந்துறை: சிறுவனுக்கு பாலியல் தொல்லை பெண் கைது

image

பெருந்துறை அருகே 42 வயது பெண், தன் மகனுடன் படிக்கும் 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கைது செய்யப்பட்டார்.
​நண்பனாக வீட்டிற்கு வந்த மாணவனுடன் பழகி அப்பெண் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மாணவன் வீட்டிற்குச் செல்லாமல் அப்பெண்ணின் வீட்டிலேயே தங்கியதால், மாணவனின் தாய் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் குற்றம் உறுதியானதை அடுத்து, போலீசார் பெண்ணை கைது செய்தனர்.

News December 8, 2025

பெருந்துறை அருகே பெண் கொடூரக் கொலை!

image

பெருந்துறை அருகே தீர்த்தாம் பாளையத்தைச் சேர்ந்த செங்கோட்டையன் (60) இவர் மனைவி விஜயா(52) இருவரும் தனியாக வாழ்ந்து வந்தனர். சொத்து விற்பதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. நேற்று காஞ்சி கோவில் ரோடு அருகில் நடந்து சென்று கொண்டிருந்த விஜயாவை செங்கோட்டையன் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி விட்டார். காயமடைந்த விஜயா துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை.

News December 8, 2025

சித்தோடு அருகே வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

image

சித்தோடு செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் இரண்டு இளைஞர்கள் கத்தியை காட்டி ரூ.2 லட்சம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். தகவல் அறிந்து சென்ற சித்தோடு போலீசார் 2 வாலிபர்களையும் கையும், களவுமாக பிடித்து விசாரணை நடத்தியதில், கருங்கல்பாளையத்தை சேர்ந்த காஜாமொய்தீன் (33) மற்றும் ஹரிபிரசாத் (28) என்பது தெரியவந்தது. இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!