News November 21, 2024
வேப்பந்தட்டை: விடுதலை செய்யப்பட்ட 21 விசிக தொண்டர்கள்

வேப்பந்தட்டை ஒன்றியம் கை.களத்தூர் பேருந்து உடைக்கப்பட்டதாக 23 ஆண்டுகளுக்கு முன் பதியப்பட்ட வழக்கில் முன்னாள் விசிக மாவட்ட அமைப்பாளர்கள் பொன். பால்ராஜ் (எ) பாவணன், முன்னாள் மாவட்ட செயலாளர் சி. தமிழ்மாணிக்கம் உள்ளிட்ட 21 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வழக்கு 23 ஆண்டுகளுக்கு பிறகு முடிவடைந்து இன்று (21/11/2024) விடுதலை அடைந்தனர்.
Similar News
News December 13, 2025
பெரம்பலூர்: மாணவர்களுக்கு கல்வி கடனுதவி

பெரம்பலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி பயில, தமிழக அரசு சார்பில் கடனுதவி வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதில் மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல் மற்றும் முதுகலை ஆகிய படிப்புகளும் சேரும் என்றும், இது குறித்த தகவலுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
News December 13, 2025
பெரம்பலூர்: மக்களே உடனடி தீர்வு வேண்டுமா?

பெரம்பலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்கள் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <
News December 13, 2025
பெரம்பலூர்: டிராவல்ஸ் நிறுவனத்திற்கு ரூ.50,000 அபராதம்

பெரம்பலூரை சேர்ந்த அமரஜோதி என்பவர் சென்னை செல்வதற்காக மொபைல் செயலி மூலம், தனியார் டிராவல்ஸ் பேருந்தை புக் செய்துள்ளார். இந்நிலையில் நீண்ட நேரம் ஆகியும் பேருந்து வராததால் வேறு பேருந்தில் சென்ற நிலையில், அன்று பணிக்கு விடுப்பு எடுக்கும் நிலமையானது. இது தொடர்பாக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து தனியார் டிராவல்ஸ் பயணிக்கு ரூ.50,000, மனு செலவிற்கு ரூ.10,000 வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.


